Monday, April 29, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்சந்தைக்கு வரவிருக்கும் வீட்டு வேலை செய்யும் ரோபோ: டைசன் நிறுவனம் உறுதி!

    சந்தைக்கு வரவிருக்கும் வீட்டு வேலை செய்யும் ரோபோ: டைசன் நிறுவனம் உறுதி!

    வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்ப உலகில் அறிவியலின் பயன்பாடு அளப்பரியது. அதிலும், தற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ரோபா முழுவதுமாக பயன்பாட்டுக்கு வராத நிலையில், அதன் சார்பான ஆய்வு மட்டும் இன்னமும் நடந்து கொண்டே வருகிறது.

    மனிதர்களின் வேலைச் சுமையை குறைக்கும் வகையில், ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரோபோக்கள் பாதுகாப்பானாதா தானா என்று கேள்வியும் எழுகிறது. இதற்கெல்லாம் முடிவு கட்டும் வகையில் பல ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வீட்டு வேலைகளை செய்யும் ரோபோக்களை சந்தைக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது டைசன் நிறுவனம்.

    வீட்டுத் தரை மற்றும் தொழிற்சாலைத் தளம் என, ரோபோக்களை பயன்படுத்தி சுத்திகரிப்பதில், முன்னோடியாக விளங்குகிறது டைசன் நிறுவனம். இந்நிறுவனம், வீட்டு வேலைகளை சரியாக செய்யும் ரோபோக்களை விரைவில் சந்தைக்கு கொண்டுவர இருக்கிறது.

    சமீபத்தில் டைசன் நிறுவனம், ரோபோ ஒன்று வேலை செய்யும் காணொளியை வெளியிட்டது. அதில், ஒரு ரோபோ, தரையில் கிடக்கும் பொம்மைகளை தன் கை விரல்களால் எடுக்கிறது. பாத்திரங்கள் அனைத்தயும் உலர்த்தி அடுக்கி வைக்கிறது. இருக்கைகள் மீதுள்ள துாசியை ‘வாக்குவம் கிளீனர்’ செய்வது போல உறிஞ்சி சுத்தம் செய்கிறது.

    ரோபோவியலில், கடந்த 20 வருடங்களாக டைசன் நிறுவனம் ஆராய்ந்து வருகிறது. இதனால் அது, தரையை துடைக்கும் வட்ட வடிவ ரோபோவோடு நிற்காமல், அடுத்த நிலையாக வீட்டுக்குள் நடமாடி, கைநீட்டி, வேலைகளைச் செய்யும் அசல் ரோபோக்களை டைசன் நிறுவனம் சோதித்து வருகிறது.

    டைசன் நிறுவனம், 2000 ஆம் ஆண்டில் தொடங்கி, தற்போது வரையில் கிட்டத்தட்ட 250 ரோபோ வல்லுநர்களை, தனது சிங்கப்பூர் மற்றும் பிரிட்டன் மையங்களில் பணியில் அமர்த்தியுள்ளது. விரைவாக ரோபோ துறையில், 750 மிகச் சிறந்த மூளைகளை வேலைக்கு அமர்த்தவுள்ளது.

    இதன் மூலமாக, வருங்கால வீட்டு வேலை செய்யும் ரோபோக்கள் மற்றும் தனி நபருக்கு உதவி செய்யும் ரோபோக்கள் சந்தையில், முன்னணி ரோபோவாக இடம் பிடிக்க டைசன் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

    எட்டாவது மாடியிலிருந்து குதித்த நோயாளி!! உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதி!!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....