Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதிருப்பதி லட்டு வழங்கும் மையத்தில் கொள்ளைச் சம்பவம்

    திருப்பதி லட்டு வழங்கும் மையத்தில் கொள்ளைச் சம்பவம்

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு வழங்கும் மையத்தில் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகப் புகழ்பெற்ற தலமாகும். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பக்தர்கள் பலரும் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து பிரசாதமான லட்டை பெற்று செல்கின்றனர். 

    இந்நிலையில், திருப்பதி-திருமலை தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி லட்டு மைய வளாகத்தில், 36 ஆவது கவுண்டரில் பணம் கொள்ளை போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு மட்டும் சுமார் 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

    இந்தச் சம்பவம் தொடர்பாக தேவஸ்தான அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு வாங்க பலர் வரிசையில் காத்திருக்கும் சூழலில், அவ்வளவு கூட்டத்திற்கு மத்தியிலும் லட்டு கவுண்டரில் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் ரகசிய ஆவணங்களா? – எஃப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....