Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் ரகசிய ஆவணங்களா? - எஃப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை!

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் ரகசிய ஆவணங்களா? – எஃப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை!

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எஃப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அமெரிக்காவின் துணை அதிபராகவும், எம்.பியாகவும் ஜோ பைடன் இருந்த காலக்கட்டத்தில் அவர் நிர்வகித்து வந்த முக்கிய ஆவணங்களை அரசு ஆவணக் காப்பக்கத்தில் ஒப்படைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது முன்வைக்கப்பட்டது. 

    இந்தக் குற்றச்சாட்டு விஸ்வரூபம் எடுக்க, ஜோ பைடன் வீட்டில் சோதனை நடந்துமாறு அமெரிக்க நீதித் துறை உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, எஃப்.பி.ஐ அதிகாரிகள் அவரது இல்லத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அமெரிக்க அரசியலில் இந்த சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

    ஜோ பைடன் வீட்டில் 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்களும், 6 ரகசிய ஆவணங்களும் கைப்பற்றப் பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    இந்த ஆவணங்கள் அனைத்தும் ஜோ பைடன் அமெரிக்காவின் துணை அதிபராக இருந்த 2009 முதல் 2016 ஆண்டு வரையிலான ஆவணங்கள் என்று கூறப்படுகிறது. 

    முன்னதாக, ஜோ பைடனின் வில்மிங்டன் இல்லத்தில் சில ரகசிய அரசாங்க பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், வாஷிங்டன் டிசியில் உள்ள பைடனின் தனியார் அலுவலகத்திலும் சில ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஜோ பைடனின் வீட்டில் சிக்கிய ஆவணங்கள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    தொண்டர் மீது கோபத்தில் ‘கல்’ எறிந்த அமைச்சர் நாசர் – வெளியான பரபரப்பு காணொளி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....