Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்லண்டலில் போலியோ பரவும் அபாயம்; கழிவு நீர் மாதிரிகளில் போலியோ வைரஸ்

    லண்டலில் போலியோ பரவும் அபாயம்; கழிவு நீர் மாதிரிகளில் போலியோ வைரஸ்

    லண்டலில் போலியோ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், குழந்தைகளுக்கு போலியோ பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

    லண்டனில் உள்ள கழிவு நீர்த் தேக்கம் ஒன்றில் போலியோ நோய்க்குக் காரணமான வைரஸ் இருப்பதாக உலகச் சுகாதார மையம் கண்டு பிடித்துள்ளது.

    இது மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், லண்டன் அரசு குழந்தைகளுக்கு அந்த வைரஸ் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மேலும், இது சமூக பரவலின் அறிகுறியாக மாறலாம் என்றும் சுகாதாரத்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், இதில் ஆறுதல் தரும் விஷயம் என்னவென்றால், இதுவரை அங்கு யாரும் போலியோ மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்படவில்லை.

    அங்குள்ளவர்கள் அனைவருக்கும் சிறுவயதிலேயே போலியோ தடுப்பூசி போடப்பட்டுள்ளதால், இது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பு குறைவு என்கின்றனர்.

    கொரோனாவைப் போல், ஒரு கட்டத்தில் உலகையே உலுக்கிய நோய்களில் ஒன்று போலியோ. இதன் காரணமாக பலர் கால், கைகளை இழந்து மாற்றுத்திறனாளி ஆனார்கள்.

    அதன் தொடர்ச்சியாக, மேற்கொள்ளப்பட்ட தீவிர ஆராய்ச்சியின் பலனாக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக உலகின் பல நாடுகள் போலியோ தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட காரணத்தால், அதன் தாக்கம் மெல்ல மெல்லக் குறைந்து, ஒரு கட்டத்தில் பல நாடுகளில் போலியோவே இல்லாத நிலை உண்டானது.

    லண்டன் நகரில் கடந்த 1984-ம் ஆண்டு கடைசியாக போலியோ தொற்று கண்டறியப்பட்டது. 2003-ம் ஆண்டு பிரிட்டன் போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. தற்போது 40 ஆண்டுகளுக்குப் பிறகு, லண்டன் நகரில் போலியோ பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    தேசிய அளவில், முடக்குவாத போலியோவின் ஒட்டுமொத்த ஆபத்தும் குறைவாக இருக்கும் என்று லண்டன் ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சி தெரிவித்து உள்ளது.

    இதனால், லண்டனில் சுமார் 10 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இதுவரை போலியோ வைரஸ் நோயால் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் எதுவும் இல்லை.

    பிப்ரவரி மற்றும் ஜூன் 2022 க்கு இடையில் லண்டன் பெக்டன் கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட பல கழிவுநீர் மாதிரிகளில், முதல் முறையாக இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே சமயம், இதுவரை போலியோ தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், அவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் தடுப்பூசி நிலையை ரெட் புக்கில் சரிபார்க்கலாம். அவர்கள் அல்லது அவர்களின் குழந்தை முழுமையாகப் புதுப்பித்த நிலையில் இல்லை என்றால், தடுப்பூசியை முன்பதிவு செய்ய மக்கள் தங்கள் குடும்ப மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும் என லண்டன் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    கடலுக்கடியில் புதைந்துள்ள உலகப்போர் ஆயுதங்கள்; உயிரினங்களை கொல்லும் என ஆய்வறிக்கை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....