Friday, March 22, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா'ரிஷப் பந்த் நலம் பெற பிராத்திக்கிறேன்' - பிரதமர் மோடி ட்விட்..

    ‘ரிஷப் பந்த் நலம் பெற பிராத்திக்கிறேன்’ – பிரதமர் மோடி ட்விட்..

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரிஷப் பந்தின் விபத்துச் செய்தி கேட்டு மன உளைச்சலுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார். 

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர், ரிஷப் பந்த். இவர் கடந்த 29-ஆம் தேதி ரூர்க்கியில் உள்ள தனது வீட்டில் இருந்து கார் மூலம் டெல்லி சென்றுக்கொண்டிருந்தார். 

    அப்போது எதிர்பாராத விதமாக ரிஷப் பந்தின் கார், உத்தரகண்ட் மாநிலம் ஹம்மாத்பூர் ஜால் அருகே ரூர்க்கியின் நர்சன் எல்லையில் விபத்துக்குள்ளானது. கார் டிவைடரில் மோதியதில் தீப்பிடித்ததுள்ளது. விபத்து நேர்ந்ததும் பந்த் தாமாக முயன்று கண்ணாடியை உடைத்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

    மேலும், ரிஷப் பந்த் முதலில் ரூர்க்கியில் உள்ள சக்ஷாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், தற்போது அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 

    தற்போது வெளிவந்துள்ள தகவல்களின்படி, ரிஷப் பந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைசமயம், அவரின் தலையிலும், காலிலும் பலத்த அடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பகுதியில், ரிஷப் பந்தின் விபத்துச்செய்தி கேட்டு மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும், அவர் விரைவில் நலம் பெற பிராத்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    புத்தாண்டை முன்னிட்டு கடற்கரை சாலைகளில் அனுமதி இல்லை – காவல்துறை உத்தரவு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....