Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாசூழல் ஜாம்பவான் வார்னேவுக்கு புகழ் அஞ்சலி - நினைத்து உருகிய சச்சின்

    சூழல் ஜாம்பவான் வார்னேவுக்கு புகழ் அஞ்சலி – நினைத்து உருகிய சச்சின்

    ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே கடந்த மார்ச் 4 ஆம் தேதி உயிரிழந்தார்

    ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே 1969 ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி பிறந்தார். இவர் உலகின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தார். ஷேன் வார்னே தனது டெஸ்ட் கிரிக்கெட்டில் 78 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

    இந்நிலையில், கடந்த மார்ச் 4-ம் தேதி தனது 52 வது வயதில் வார்னே உயிரிழந்தார். இவரது மரணம் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனிடையே உயிரிழந்த வார்னேவின் 53வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பல்வேறு தரப்பினர்களும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் சச்சின் டெண்டுல்கர் புகழ் அஞ்சலி செலுத்தி இருக்கிறார். இது குறித்து  தனது ட்விட்டர் பக்கத்தில் வார்னேவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள சச்சின் டெண்டுல்கர், ‘உங்கள் பிறந்த தினத்தன்று உங்களை நினைக்கிறேன். நீங்கள் மிக விரைவில் சென்றுவிட்டீர்கள். உங்களுடன் மிக சிறப்பான நினைவுகளைக் கொண்டிருக்கிறேன். அவற்றை என்றும் போற்றுவேன்’ என தெரிவித்துள்ளார்.

    உலக கோப்பை டி20 கிரிக்கெட்டில் தோனி – இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....