Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா'மீட்கும் பணிகளில் தொய்வுகள் இல்லை' - மோர்பி பால விபத்து குறித்து மோடி பேச்சு

    ‘மீட்கும் பணிகளில் தொய்வுகள் இல்லை’ – மோர்பி பால விபத்து குறித்து மோடி பேச்சு

    மோர்பி பால விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றதென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

    குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள மச்சு நதி மீது கடந்த 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 230 மீட்டர் நீள தொங்கு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலமானது சுற்றுலாவிற்கு வரும் முக்கிய இடமாக திகழ்கிறது. 

    அந்த பாலத்தில் கடந்த 6 மாதங்களாக தனியார் நிறுவனம் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து, மூடப்பட்டிருந்த அந்தப் பாலம், புனரமைப்புப் பணிகள் முடிந்து ஐந்து நாள்களுக்கு முன்பு அதாவது, அக்டோபர் 26-ம் தேதி திறக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, அந்தப் பாலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகளவில் மக்கள் பாலத்துக்கு வந்திருந்தனர். அப்போது பொதுமக்களின் எடையைத் தாங்க முடியாமல், அந்தப் பாலம் மாலை 6.30 மணியளவில் அறுந்து விபத்து ஏற்பட்டது. பாலத்தில் இருந்தவர்கள் நதியில் விழுந்தனர். 

    உடனடியாக இத்தகவல் பரவ, தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் நதியில் மூழ்கியவர்களில் 177 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது.

    இதையும் படிங்க: 3 நாட்கள் மைசூர்-தூத்துக்குடி இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு

    மேலும், 60 பேர் இன்னும் காணவில்லை. பாலத்தில் தொங்கிக் கொண்டிருந்த சுமார் 5-10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த விபத்து சமந்தமான வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.  

    தொடர்ந்து, முப்படைகள், தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள் மீட்புப் – பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கெவாடியா நகரின் ஏக்தர் நகர் பகுதியில் நடந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் 147-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரதமர் போடி கலந்துக்கொண்டார்.

    அப்போது, மோர்பி பால விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மீட்பு பணிகளில் தொய்வு எதுவும் இல்லை எனவும், குஜராத் அரசு தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறதென்றும், மாநில அரசுக்கு தேவையான அத்தனை உதவியையும் மத்திய அரசு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: கூட்ட நெரிசல் சிக்கி 120 பரிதாப பலி! ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது நடந்த சோகம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....