Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமாற்று இடம் வழங்கிவிட்டு, ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை; பொதுமக்கள் போராட்டம்

    மாற்று இடம் வழங்கிவிட்டு, ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை; பொதுமக்கள் போராட்டம்

    செஞ்சி அருகே மாற்று இடம் கொடுத்துவிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

    செஞ்சி அருகே நல்லாண்பிள்ளைபெற்றாள் ஊராட்சிக்குட்பட்ட ராதாபுரம் கிராம ஏரிக்கரையோரம் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 5 தலைமுறைகளாக வசித்து வருகிறார்கள்.

    இவர்கள் ஏரியை ஆக்கிரமித்து வசித்து வருவதாக கூறி, கடந்த சில நாள்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்ததோடு, ஆக்கிரமிப்பை தாமாக முன்வந்து அகற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது. இவர்கள் அரசாங்கத்துக்கு முறையாகத் தண்ணீர் வரி, மின்சார கட்டணம் உள்ளிட்டவற்றைச் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

    பொதுப்பணித்துறை அளித்த நோட்டீஸ்க்கு பதில் அளிக்கும் வகையில் அப்பகுதி மக்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்கிவிட்டு, ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும் என வருவாய்த்துறையினரிடம் மனு கொடுத்தனர். ஆனால், இது சம்பந்தமாக நடவடிக்கை இன்னும் எடுக்கப்படவில்லை.

    இந்நிலையில், ஆகஸ்ட் 11-ம் தேதி ராதாபுரம் ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அப்பகுதி மக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சகாதேவன், புரட்சிகர வாலிபர் சங்கம் நாகராஜ், விவசாய சங்க வட்ட தலைவர் மாதவன், பழங்குடியினர் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட் வேளாங்கண்ணி உள்ளிட்டோர் நேற்று (ஆகஸ்ட் 10) மாலை செஞ்சி தாலுகா அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

    பின்னர் அவர்கள், ஏரிக்கரையோரம் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் கொடுத்து விட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பியபடி, தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டதோடு, தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    உடனே, அங்கு வந்த தாசில்தார் நெகருன்னிசா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி, கலைந்து போக செய்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, திரளான மக்கள் அங்கு கூடியிருந்தனர்.

    இதேபோன்று, பொதுப்பணித்துறை அதிகாரிகள் சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கும் வீடுகள் மற்றும் கடைகளை இடித்த பொழுது கோவிந்தசாமி என்ற முதியவர் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தகவல் அறியும் உரிமை சட்டம்; கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட 9 பேர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....