Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ரசிகர்களை கவர்ந்த ஆமீர்கானின் தமிழ் திரைப்பட போஸ்டர்கள்; இணையத்தில் சிலாகிப்பு

    ரசிகர்களை கவர்ந்த ஆமீர்கானின் தமிழ் திரைப்பட போஸ்டர்கள்; இணையத்தில் சிலாகிப்பு

    ‘லால் சிங் சத்தா’ திரைப்பட போஸ்டர்களில் இடம்பெற்றுள்ள வாக்கியங்கள் வெகுவாக ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

    உலகளவில் புகழ்பெற்ற திரைப்படங்களில் ஒன்றுதான், ஃபாரஸ்ட் கம்ப் (Forrest Gump). 1994-ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் நடித்திருப்பார். இத்திரைப்படம், ஃபாரஸ்ட் கம்ப் என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டது. 

    துயரத்தின் பிடியில் நாம் சிக்கியுள்ளபோது, வாழ்வின் மீது பிடிப்பே இல்லாத போது உத்வேகத்தை அளிக்கும் வகையில், மனதை இலகுவாக்கும் வகையில் ஃபாரஸ்ட் கம்ப்  திரைப்படம் இருப்பதாக உலகம் முழுவதும் பலராலும் கூறப்பட்டுவருகிறது. 

    இந்நிலையில், இப்படியான சிறப்பம்சத்தைக் கொண்ட ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்தை, இந்தி மொழியில் மறுஉருவாக்கம் செய்துள்ளனர். ‘லால் சிங் சத்தா’ என்று இத்திரைப்படத்துக்கு பெயர் வைத்துள்ளனர். ஆமீர்கான் இத்திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரமாக நடித்துள்ளார். இந்தி மொழியில் மறுஉருவாக்கம் செய்யப்பட்டாலும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இத்திரைப்படம் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. 

    இன்று (ஆகஸ்ட் 11) திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘லால் சிங் சத்தா’ திரைப்படத்தின் புரோமஷன் பணிகளுக்காக வெளியிடப்பட்ட போஸ்டர்களில், இடம்பெற்றுள்ள வாக்கியங்கள் இத்திரைப்படத்தை எதிர்பார்த்தவர்களிடத்தில் ஈர்ப்பை உண்டாக்கியுள்ளது. 

     ‘யாருக்கு தெரியும், எனக்குள்ள கதை இருக்கா…. இல்லை கதைக்குள் நானா என்று!’

     ‘எங்க அம்மா சொல்லுவாங்க, காலுல போடுற செருப்புதான் ஒருத்தரோட தனித்தன்மைய காட்டும்னு ‘

    ‘நீ தேடுற உறவு உனக்குள்ளதான் இருக்கு ’

    ‘நாம ரெண்டு பேரும் ஒன்னுதான்! ஈருடல் ஓருயிர் மாதிரி..நீ ஜட்டி நான் பனியன் மாதிரி ’

    ‘சில சமயங்களில் எதிர்பாராத வகையில அற்புதங்கள் நிகழும்’

    இவ்வாறாக ‘லால் சிங் சத்தா’ திரைப்பட போஸ்டர்களில் இடம்பெற்றுள்ள வாக்கியங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆங்கிலத்தில் வெளிவந்த ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்தின் வசனங்கள் திரைப்பிரியர்கள் மத்தியில் பெரிதும் புகழ்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. 

    நடிகர் ரஜினிகாந்த் தமிழக ஆளுநருடன் திடீர் சந்திப்பு- ‘அரசியல் பற்றி தான் பேசினோம் ஆனால்..’

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....