Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்நடிகர் ரஜினிகாந்த் தமிழக ஆளுநருடன் திடீர் சந்திப்பு- ‘அரசியல் பற்றி தான் பேசினோம் ஆனால்..'

    நடிகர் ரஜினிகாந்த் தமிழக ஆளுநருடன் திடீர் சந்திப்பு- ‘அரசியல் பற்றி தான் பேசினோம் ஆனால்..’

    அரசியல் பற்றி நாங்கள் பேசினோம் ஆனால், அதைப் பற்றி இப்போது உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது’ என நடிகர் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களுக்கு பதிலளித்துள்ளார். 

    நடிகர் ரஜினிகாந்த், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று (ஆகஸ்ட் 8) நேரில் சந்தித்துப் பேசினார். ஆளுநர் ஆர்.என்.ரவியுடனான சந்திப்புக்கு பின்னர் ரஜினிகாந்த், தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    ஆளுநர் ஆர்.என்.ரவியுடனான சந்திப்பு குறித்து ரஜினிகாந்த் பேசியதாவது:

    எனக்கும் ஆளுநருக்குமான சந்திப்பு மரியாதை நிமித்தமான ஒரு சந்திப்பு ஆகும். கிட்டத்தட்ட 20 முதல் 25 நிமிடங்கள் பேசினோம். தமிழகத்தை ஆளுநர் மிகவும் நேசிக்கிறார். முக்கியமாகத் தமிழ் மக்கள், தமிழக மக்களின் நேர்மை, கடின உழைப்பு என அனைத்தும் ஆளுநருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இங்கே இருக்கிற ஆன்மிக உணர்வு அவரை அதிகளவு ஈர்த்திருக்கிறது. தமிழ்நாட்டின் நல்லதுக்காக அவர், பணி செய்யத் தயாராக இருக்கிறார். 

    இவ்வாறு, நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

    மேலும், அதைத்தொடர்ந்து ரஜினிகாந்த்திடம், இந்த சந்திப்பில் அரசியல் சம்பந்தமாக பேசினீர்களா? என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு, ‘அரசியல் பற்றி நாங்கள் பேசினோம். ஆனால், அதைப் பற்றி இப்போது உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது’ என ரஜினிகாந்த் பதிலளித்தார்.

    இதைத்தொடர்ந்து, அத்தியாவசியப் பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி வரி உயர்வு குறித்து கேட்டதற்கு, `நோ கமெண்ட்ஸ்’ என கூறிய ரஜினி, ‘மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான திட்டம் எதுவும் இல்லை’ எனவும் தெரிவித்தார்.

    உணவு விநியோக ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் உள்ளதா? – அன்புமணி கேள்விக்கு அமைச்சரின் பதில்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....