Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகாதலனை கொன்ற கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி: விசாரணை வளையத்தில் சிக்கியது யார் யார்?

    காதலனை கொன்ற கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி: விசாரணை வளையத்தில் சிக்கியது யார் யார்?

    காவல் நிலையத்தின் கழிவறையில் வைக்கப்பட்டிருந்த கிருமிநாசினியைக் குடித்து , கீரிஷ்மா தற்கொலைக்கு  முயன்றுள்ளார்

    கேரள மாநிலம் பாறசாலைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஷரோன் கடந்த அக்டோபார் மாதம் 25-ம் தேதி உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகமிருப்பதாக கூறி ஷரோனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். 

    இதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ஷரோனிடமிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக, அவரது காதலி  கிரீஷ்மா ஆயுர்வேத மருந்து என்று சொல்லி பூச்சி மருந்தைக் கலந்து குடிக்கக் கொடுத்ததை ஒப்புக்கொள்ளவே, பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கை விசாரித்து வரும் குற்றவியல் பிரிவு காவல்துறையினர் ,இந்த வழக்கில் கிரீஷ்மாவுடன் சம்மந்தப்பட்ட அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களையும் விசாரணை வலையத்திற்குள் கொண்டுவந்து வெவ்வெறு காவல்நிலையங்களில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இந்த கொலை சம்பவத்தில் அவர்களுக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர் .

    மேலும் இந்த நான்கு பேரிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் ,அவர்கள் அனைவரும் முன்னுக்கு பின்னான தகவல்களை சொல்லியிருப்பதாகவும் அதில் முரண்பாடான கருத்துகள் அதிகம் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில்,விசாரணைக்காக நெடுமன்காடு காவலநிலையத்திற்கு கிரீஷ்மாவை விசாரணைக்காக அழைத்துச் சென்றிருந்த போது , காவல் நிலையத்தின் கழிவறையில் வைக்கப்பட்டிருந்த கிருமிநாசினியைக் குடித்து , கீரிஷ்மா தற்கொலைக்கு  முயன்றுள்ளார். இதைத்தொடர்ந்து, உடனடியாக அவரை காவல் துறையினர்  மீட்டு திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  தற்போது அவர் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

    காவலர்களின் கிடுக்கிப்பிடி விசாரணைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கிரீஷ்மா குற்றத்தை ஒப்புக்கொண்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

    மேலும் தற்கொலை நாடகமாடியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டால்,அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.அதே நேரம் தற்கொலை உறுதி செய்யப்பட்டால், அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: ‘மீட்கும் பணிகளில் தொய்வுகள் இல்லை’ – மோர்பி பால விபத்து குறித்து மோடி பேச்சு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....