Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவெறும் ரூ.10 நாணயத்தில் 'பைக்' - இணையத்தில் வைரலாகும் சம்பவம்

    வெறும் ரூ.10 நாணயத்தில் ‘பைக்’ – இணையத்தில் வைரலாகும் சம்பவம்

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் வட்டம், கெலமங்கலம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜிவ். 31 வயதாகும் இவர் மருத்துவமனை நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் செய்த செயல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    ஆம், ராஜிவ் தன் நண்பர்களான கெலமங்கலம் ஜீவா நகரை சேர்ந்த 30 வயதான சாதிக், போச்சம்பள்ளியை சேர்ந்த 27 வயதான யுவராஜ் ஆகியோருடன் இணைந்து 10 ரூபாய் நாணயங்களை சேகரித்து 1.80 லட்சம் ரூபாய்க்கு ஓசூர் ரிங் ரோட்டிலுள்ள ஸ்ரீவேலன் டி.வி.எஸ், ஷோரூமில் அதை கொடுத்து பைக் வாங்கினார். 

    இச்சம்பவம் இணையத்தில் வைரலாக, இந்நிகழ்வு குறித்து ராஜிவ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்ட தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

    அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 10 ரூபாய் நாணயங்கள் பல இடங்களில் வாங்கப்படுவதில்லை. இதனால் அதை வாங்க மக்கள் தயங்குகின்றனர். அந்த நாணயம் செல்லாது என்ற தவறான எண்ணம் மக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் நிலவுகிறது.

    அது தவறு என மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே கடந்த மூன்று வருடங்களாக தன் நண்பர்களுடன் இணைந்து 10 ரூபாய் நாணயங்களை சேகரித்து இந்த நிகழ்வை ராஜிவ் நிகழ்த்தியுள்ளார். 

    அந்த பைக்கிற்கு முன்பணமாக, இந்த நாணயங்களை வழங்கிய அவர், 3.45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ‘டி.வி.எஸ்., அப்பாச்சி ஆர்.ஆர்., 310’ என்ற மாடல் பைக்கை கடனில் வாங்கியுள்ளார். 

    சென்னை போன்ற மாநாகராட்சிகளை தவிர்த்து தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயங்கள் செல்வதில்லை என்ற பேச்சு உலவுவது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....