Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்திடீரென ட்விட்டரில் டிரெண்டிங் ஆன ரஜினிகாந்த்...காரணம் என்ன?

    திடீரென ட்விட்டரில் டிரெண்டிங் ஆன ரஜினிகாந்த்…காரணம் என்ன?

    சமூகவலைதளங்களில் ரஜினிகாந்த் இடம்பெற்றுள்ள ஜெயிலர் புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.  

    கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த்தின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம்தான், ஜெயிலர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இதைத்தொடர்ந்து வெளிவந்த ஜெயிலர் பட முதல் பார்வை நல்ல வரவேற்பைப் பெற்றது.

    மேலும், ஜெயிலர் திரைப்படத்தில்  நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவலை ஜெயிலர் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த அறிவிப்பின்படி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் இந்தப் படத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இது திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்தது. 

    ரஜினி

    அவ்வபோது, ட்விட்டரில் ‘ஜெயிலர்’  டிரெண்டிங் ஆவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அவ்வகையில் தற்போது மீண்டும் ஹேஷ்டெக் ஜெயிலர் (#jailer) உடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடம்பெற்றிருக்கும் புகைப்படம் ட்விட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் சென்றுக்கொண்டிருக்கும் புகைப்படம்தான் அதுவென தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    இதையும் படிங்க:நடிகர் விஷால் வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல்! சிசிடிவி ஆதாரத்துடன் போலீசில் புகார்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....