Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணியில் புதுமாற்றம்.....

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணியில் புதுமாற்றம்…..

    சிறுசிறு மாற்றத்துடன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணி இன்று முதலாவது இருபது ஓவர் போட்டியில் களமிறங்குகிறது. 

    தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் தென்னாப்பிரிக்க அணி 3 இருபது ஓவர் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்நிலையில், இன்று இருபது ஒவர் தொடங்குகிறது.

    அதன்படி, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான முதல் இருபது ஓவர் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. மேலும், முன்னதாகவே தென்னாப்பிரக்க தொடருக்கு எதிரான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் அவற்றில் சில மாறுதல்கள் அரங்கேறியுள்ளது. 

    முன்பு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இடம்பெற்ற, தீபக் ஹூடா முதுகு வலி காரணமாக வெளியேற, ஷமி கொரோனா தொற்றில் இருந்து இன்னும் மீளவில்லை. மேலும், பாண்டியா, புவனேஸ்வர் குமார் உடற்தகுதி தொடர்பான சோதனைகளுக்கு சென்றுள்ளார்கள். ஆதலால், இவர்கள் நால்வரும் தென்னாப்பிரிக்க தொடருக்கு எதிரான இருபது ஓவர் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். 

    இவர்களுக்கு பதிலாக, உமேஷ் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ஷாபாஸ் அஹமது, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். 

    தென்னாப்பிரிக்கா இருபது ஓவர் தொடருக்கான இந்திய அணி:

    ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், சஹால், அர்ஷ்தீப் சிங், அக்ஷர் படேல், பும்ரா, ஹர்ஷல் படேல், தீபக் சஹார், உமேஷ் யாதவ், ஷாபாஸ் அஹமது. 

    இதையும் படிங்க: இலங்கை கொழும்பு அருகே பயங்கர தீ விபத்து; 80-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....