Wednesday, March 20, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இறுதிப்பட்டியலுக்குள் நுழைந்த ஆர்ஆர்ஆர்; ஆஸ்கரை கைப்பற்றுமா?

    இறுதிப்பட்டியலுக்குள் நுழைந்த ஆர்ஆர்ஆர்; ஆஸ்கரை கைப்பற்றுமா?

    சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதின் இறுதிப்பட்டியிலில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ‘நாட்டுக்குத்து’ எனும் பாடல் இடம்பிடித்துள்ளது. 

    பாகுபலி திரைப்படத்துக்கு பிறகு, இந்திய அளவில் முக்கிய இயக்குநராக வலம் வருபவர், ராஜமௌலி. இவரின் இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம்தான், ஆர்ஆர்ஆர். இத்திரைப்படம்  நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், இப்படமானது உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

    இதைத்தொடர்ந்து, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் சமீபத்தில் ரீ-ரிலிஸ் செய்யப்பட்டது. அப்போது திரைப்படத்தைக் கண்ட அமெரிக்காவை சேர்ந்த திரையுலக பிரபலங்கள், விமர்சகர்கள் ஆர்ஆர்ஆர் படத்துக்கு தங்களின் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். இதன்பின்னர், ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை பல்வேறு பிரிவின் கீழ் ஆஸ்கர் விருதுக்கு படக்குழு விண்ணப்பித்திருந்தது. 

    இந்நிலையில், சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான இறுதிப்பட்டியலை ஆஸ்கர் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள 15 பாடல்களில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ‘நாட்டுக்குத்து’ எனும் பாடல் இடம்பிடித்துள்ளது. இதனால் படக்குழுவானது ஆனந்தத்தில் உள்ளது. ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார். 

    முன்னதாக, ஜனவரி 10-ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெறவுள்ள கோல்டன் குளோப் விருதின் நாமினேஷன் பட்டியலுக்கு இரண்டு பிரிவின் கீழ் ஆர்ஆர்ஆர் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    வாட்சப்பில் புதிய அம்சம்; மக்களே, இனி குழப்பம் வேண்டாம்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....