Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநாளை முதல் 'மழை' சென்னையை விட்டு இதர மாவட்டங்களுக்கும் இடம்பெயரும்: தமிழ்நாடு வெதர்மேன்

    நாளை முதல் ‘மழை’ சென்னையை விட்டு இதர மாவட்டங்களுக்கும் இடம்பெயரும்: தமிழ்நாடு வெதர்மேன்

    மேகக் கூட்டங்கள் நெருங்கி வருவதை பார்க்கும் போது இன்று வட சென்னையை விட தென் சென்னையில் நல்ல கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், இன்று நீண்ட நெடிய மழை நாளாக சென்னைக்கு இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து மழை குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.இந்திய வானிலை ஆய்வு மையம், சென்னை வானிலை ஆய்வு மையம் தவிர,வானிலை ஆராய்ச்சி குறித்து தனி நபர்களும்,தனியார் அமைப்புகளும் அவ்வப்போது சில புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகின்றனர்.

    அந்த வகையில் தனி நபராக வானிலை குறித்த தகவல்களை வழங்குவதில் தமிழ்நாடு வெதர்மேன் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.இவர் இன்று சென்னை மழை குறித்த அப்டேட்டுகளை மணிக்கு ஒரு முறை வழங்கி வருகிறார்.

    இதையும் படிங்கபருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மு க ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை

    அந்த வகையில் தமிழ்நாடு வெதர்மேன் இன்று சென்னை மழை குறித்த பதிவு ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் இன்று மேகக் கூட்டங்கள் நெருங்கி வருவதைப் பார்க்கும் போது, சென்னைக்கு ஒரு நீண்ட நெடிய மழை நாளாக அமையும் என்று கூறியுள்ளார்.

    மேலும் வட சென்னையைக் காட்டிலும் தென் சென்னையில் இன்று கூடுதலாக மழை பெய்யும் என்றும் . வட கடலோர மாவட்டங்களிலிருந்து மேகக் கூட்டங்கள் உள் மாவட்டங்களை நோக்கி நகரக் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    அதற்கு உதாரணமாக திருவண்ணாமலை, விழுப்புரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வாய்ப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் ,இதில் பாண்டிச்சேரி, கடலூர், ஆகிய பகுதிகளும் சேரும் என்று கூறியுள்ளார்.

    ஒரு வேளை மழை பெய்யாவிட்டால் நாளை நிச்சயம் பெய்யும். பெரம்பூரைத் தொடர்ந்து கத்திவாக்கம் பகுதியல் 161 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது. நல்ல செய்தி என்னவென்றால் மழை நாளை முதல் இதர மாவட்டங்களுக்கு பரவ வாய்ப்புள்ளது . இதனால் நாளை முதல் சென்னையில் படிப்படியாகக் மழை குறைந்து, நேற்றும் இன்றும் பெய்யும் மழையைக் காட்டிலும் குறைவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    இதில் நல்ல விஷயம் என்ன என்றால் நாளையில் இருந்து சென்னையில் மழை படிப்படியாக குறையும் என்பதால், சென்னை வாசிகள் மழையில் இருந்து தப்பிக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்! சென்னையிலும் கொட்டும் மழை! வானிலை மையம் எச்சரிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....