Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மு க ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை

    பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மு க ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை

    வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தது முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதக்க தவளைகள் வெளியாகி உள்ளது.

    அக்டோபர் தொடக்கத்திலேயே ஆரம்பித்து நவம்பர் ,டிசம்பர் என மூன்று மாதங்கள் பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழை ,அண்மையில் வங்கக் கடலில் உருவான சிட்ரங் புயலால் தாமதமானதாகவும்,முதல் மழைப்பொழிவு அடுத்த மாதம் நவம்பர் 4-ந் தேதி வரை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இதையும் படிங்க: சென்னையில் கனமழை… பாதிப்பு எப்படி? கொட்டும் மழையிலும் களமிறங்கி மேயர் பிரியா ஆய்வு

    தற்போது தொடங்கியிருக்கும் இந்த பருவமழையால், நவம்பர் 1-ந் தேதியில் இருந்து படிப்படியாக மழையின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும்,வட தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டிருந்தது.அதேபோல் நவம்பர் 4-ந் தேதிக்கு பிறகு மழையின் தீவிரம் குறைந்து, பின்னர் மீண்டும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவாரூர், உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.தொடர்ந்து சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .

    இதனால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல் அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் காணொலி காட்சி வாயிலாக இன்று காலை தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பெங்கேற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதையும் படிங்க‘நான்தான் திருடன் பேசுறேன்’ – மடிக்கணினியை பறிகொடுத்தவருக்கு வந்த மெயில்…வைரல் பதிவு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....