Monday, March 18, 2024
மேலும்
    Homeவானிலைஇன்னும் இரண்டு நாள் தான் இருக்கு - தென்மேற்கு பருவமழை ஆரம்பிக்க...

    இன்னும் இரண்டு நாள் தான் இருக்கு – தென்மேற்கு பருவமழை ஆரம்பிக்க…

    தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே  தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சீதோஷ்ண நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக 27ம் தேதிக்கு பதில் 23ம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும் என்று கூறப்படுகிறது.

    இந்தியாவில், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என்ற இரு பருவ காலங்கள் மூலமாக மழை பெய்து வருகிறது. இதில், தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலும், வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர், ஜனவரி மாதங்கள் வரையிலும் நீடிக்கும்.

    இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் தென் மாநிலங்கள் மட்டுமின்றி வடமாநிலங்களிலும் அதிக மழை பெய்யும்.

    அந்தமான் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி தென்படும். இந்திய வானிலை ஆய்வு மையம் இதனை கணித்து தென்மேற்கு பருவமழை தொடங்குவதை அறிவிக்கும்.

    வழக்கமாக ஜூன் மாதம் முதல் தேதி வாக்கில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கும். இந்த ஆண்டு அந்தமான் நிகோபார் தீவுகளில் முன்கூட்டியே மே மாதத்திலேயே தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு சாதகமான வானிலை காணப்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து வருகிற 27ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. தற்போது சீதோஷ்ண நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக 27ம் தேதிக்கு பதில் 23ம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

    தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டால் தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும் அதிக மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால் குற்றாலம் அருவிகளிலும் வெள்ளம் கொட்டும்.

    தண்ணீரை எப்போது, எந்த நேரத்தில் குடித்தால் ஆரோக்கியம் பெருகும்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....