Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்மக்கள் இடையே மொழியின் பெயரால் சர்ச்சை கிளப்ப சிலர் முயற்சி - பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

    மக்கள் இடையே மொழியின் பெயரால் சர்ச்சை கிளப்ப சிலர் முயற்சி – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

    ராஜஸ்தானில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மொழி சர்ச்சை குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

    மொழி அடிப்படையிலான சர்ச்சையை கிளப்ப முயற்சி நடப்பதாகவும், ஒவ்வொரு மொழியும் இந்தியாவின் அடையாளமே எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இப்போது தேசிய அரசியல் மையம் கொண்டுள்ளது. தேசிய பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் காணொலி வாயிலாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதாவது:

    “உலகமே இன்று இந்தியாவை பெரும் எதிர்பார்ப்புடன் பார்ப்பதாக தெரிவித்தார். நாட்டு மக்கள் பாஜகவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்ப்பதாகவும், இந்தியாவின் வளமான எதிர்காலக் குறியீட்டை எழுதத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞரையும் பாஜகவுடன் இணைக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் , குடும்ப அரசியலால் வஞ்சிக்கப்பட்ட இளைஞர்களின் நம்பிக்கையை பாஜகவால் மட்டுமே மீட்டெடுக்க முடியும்.

    அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்கை நாம் நிர்ணயித்து வருகிறோம். அனைத்து சவால்களையும் கடந்து இந்திய மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தொடர்ந்து உழைக்க வேண்டும். இந்தியா கனவுகளால் நிரம்பிய நாடாகப் பார்க்கப்படுகிறது. இப்போது, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும், கனவை நிறைவேற்ற வேலை செய்ய விரும்புகிறான். இதனால் அரசின் பொறுப்புகள் பெருமளவில் அதிகரித்து உள்ளது.

    நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் தான். கடந்த சில நாட்களாக, மொழி அடிப்படையில் சர்ச்சைகளைக் கிளப்ப சில முயற்சிகள் நடப்பதைப் பார்க்கிறோம். பாஜக ஒவ்வொரு மாநில மொழியிலும் இந்தியக் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பைப் பார்க்கிறது. அவற்றை வணங்குகிறது. தேசிய கல்விக்கொள்கையில் கூட அனைத்து பிராந்திய மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்’ என்று தெரிவித்து உள்ளார்.

    இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் இந்தி திணிப்பு குறித்த சர்ச்சைகளும், விவாதங்களும் எழுந்துவரும் நிலையில், பிரதமர் மோடியின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

    வங்கதேசத்தில் ஆற்றில் மூழ்கிய கப்பல் – நடந்தது என்ன?

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....