Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை!

    சென்னையில் தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை!

    சென்னையில் ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தனது இரண்டாவது மனைவி வீட்டில் தற்கொலை செய்து கொண்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னை திருவேற்காடு சுந்தர சோழபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ். இவர் ரியல் எஸ்டேட் தொழில் பார்த்து வந்துள்ளார். இவரது முதல் மனைவி லதா (வயது நாற்பது) . இவர்களுக்கு பிரசன்னா (வயது பதினேழு) என்கிற மகனும், மதுமிதா ( வயது பதினைந்து) என்கிற மகளும் உள்ளனர்.

    அத்துடன் ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்து பெற்ற பிரியதர்ஷினி என்கிற பெண்ணுடனும் இவர் வாழ்ந்து வந்துள்ளார். நேற்று பிரியதர்ஷினி வீட்டில் இருந்த ரமேஷ், திடீரென உள்ளே சென்று கதவை தாழிட்டுக்கொண்டதாக தெரிகிறது.

    இந்நிலையில் நேற்று பிரியதர்ஷினி வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தபோது வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிய ரமேஷ் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.

    வெளியே இருந்த பிரியதர்ஷினி , நீண்ட நேரமாகியும் ரமேஷ் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு ரமேஷ் தூக்கில் தொங்கியபடி இருப்பதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ரமேஷின் இரு மனைவி மற்றும் குழந்தைகள் தற்போது ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.

    பின்னர் தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர் ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவர் மன உலைச்சலில் இருந்ததாகவும், அதன் காரணமாகவே தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. இருப்பினும் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணமாக இருக்குமோ என்கிற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சூரி ஹேர்ஸ்டைல், க்யூட் பிரியங்கா மோகன், …ஆங்ரி சமுத்திரக்கனி – டான் திரைப்பட மீம்ஸ்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....