Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபேருந்திற்குள்ளும் கொட்டித்தீர்த்த மழை; 'ரெயின் கோட்' உடுத்திய பயணி - கடுப்பில் மக்கள்!

    பேருந்திற்குள்ளும் கொட்டித்தீர்த்த மழை; ‘ரெயின் கோட்’ உடுத்திய பயணி – கடுப்பில் மக்கள்!

    பேருந்திற்கு வெளியில் மட்டுமல்லாது பேருந்திற்குள்ளும் மழை பெய்ததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். 

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று இரவு முதல் மழை அதிகளவில் மழை பெய்து வருகிறது. மேலும், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடருமென வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று இரவு முதலே சென்னையில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    சென்னையில் இன்று காலை முதல் வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கும் மழையில், பொது மக்கள் தங்களது பணிகளுக்கு செல்ல கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். 

    மழைநீர் தேக்கம், போக்குவரத்து நெரிசல் என மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். மேலும், மழையானது வெளியில் மட்டுமல்லாமல், பல அரசுப்பேருந்துகளுக்கு உள்ளும் பெய்தது. சென்னையில் இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் (மகளிர் இலவச பேருந்து) மேற்கூரை சரியில்லாத காரணத்தினாலும், ஜன்னல்களை சரிவர மூட முடியாத காரணத்தினாலும் பேருந்திற்குள் நின்றிருந்த பயணிகள் மழையால் நனைந்தனர். இருக்கைகளும் மழையில் நனைந்ததால் உட்கார முடியாமல் அவதிப்பட்டனர். இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். சிலர், பேருந்திற்குள்ளாகவே “ரெயின் கோட்” உடுத்தி நின்றுக்கொண்டிருந்தனர். 

    வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், முறையான பேருந்துகளை சரியான நேரத்தில் இயக்குமாறு மக்கள் வேண்டுகொள் விடுத்து வருகின்றனர். 

    இதையும் படிங்க: நள்ளிரவு தொடங்கி கொட்டி தீர்க்கும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....