Friday, March 15, 2024
மேலும்
    Homeவானிலை8 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் தகவல்

    8 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் தகவல்

    சென்னை: தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக, 

    இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் கரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

    திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். 

    சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகைளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

    சென்னையைப் பொறுத்தவரை:

    வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும். அதிகபடச்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 

    இவ்வாறு, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

    இதையும் படிங்க: பேருந்திற்குள்ளும் கொட்டித்தீர்த்த மழை; ‘ரெயின் கோட்’ உடுத்திய பயணி – கடுப்பில் மக்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....