Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇரயில்வே நிர்வாகம் பிறப்பித்த புதிய உத்தரவு; அதிர்ச்சியின் தவிப்பில் மக்கள்!

    இரயில்வே நிர்வாகம் பிறப்பித்த புதிய உத்தரவு; அதிர்ச்சியின் தவிப்பில் மக்கள்!

    நீண்ட தூர பயணங்களுக்கு இரயிலில் பயணம் செய்வது தான் பாதுகாப்பானது. இரயில் பயணிகள் எங்கு சென்றாலும், தங்கள் உடைமைகளை எடுத்துச் செல்வது வழக்கம். இதுநாள் வரையிலும், உடைமைகளுக்கு தனியாக கட்டணம் என்று ஒன்றை இரயில்வே நிர்வாகம் வசூலித்தது இல்லை. ஆனால், தற்போது இரயிலில் பயணிக்கும் போது, உடன் எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

    இரயில்களில் பயணிக்கும் போது, பயணிகள் அளவுக்கு அதிகமாக எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கு, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதன்படி, இரயில்களில் மேற்புறம் இருக்கும் சங்கிலியை இழுக்கும் சம்பவங்கள், சமீப காலமாக கணிசமாக அதிகரித்து வருகிறது.

    மேலும், சக பயணிகளுடைய சிரமத்தை மனதில் வைத்தும், இரயில் பயணத்தின் போது அதிகப்படியான உடைமைகளை உடன் எடுத்துச் செல்வது குறித்து இரயில்வே நிர்வாகம் பயணிகளை ஏற்கனவே எச்சரித்துள்ளது. இரயிலில் பயணம் செய்யும் போது லக்கேஜ்களை எடுத்துச் செல்வதற்கு ஒரு வரைமுறை உள்ளது. இருப்பினும், பல பயணிகள் அதிக உடைமைகளுடன் இரயிலில் பயணித்து வருகின்றனர். இது, மற்ற பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது என இரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இதனால், இரயில் பயணத்தின் போது அளவுக்கு அதிகமான உடைமைகளுடன் பயணிக்க வேண்டாம் என, பயணிகளுக்கு அறிவுறுத்தியது இரயில்வே நிர்வாகம். இது குறித்து ரயில்வே அமைச்சகம் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ட்வீட்டில், “உடைமைகள் அதிகமாக இருந்தால் பயணத்தின் இன்பம் பாதியாக குறைந்து விடும்; அதிகளவு உடைமைகளை ஏற்றிக் கொண்டு இரயிலில் பயணம் செய்ய வேண்டாம். ஒருவேளை உடைமைகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில், பார்சல் அலுவலகத்திற்குச் சென்று அதனை முன்பதிவு செய்து கொள்வது அவசியம், என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், இரயில்களில் பயணிக்கும் பயணிகள் அளவுக்கு அதிகமாக எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. எந்த ஒரு பயணிக்கும் சிரமம் என்பது இரயில் பயணத்தில் இருக்கக் கூடாது என்பதற்காகத் தான் இரயில்வே நிர்வாகம் இம்முடிவை எடுத்துள்ளது. பயணிகள் அனைவரும் இரயில்வே நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியம்.

    வெள்ளை நிற குழந்தை பிறந்தால், மரண தண்டனை! – வினோதத்தின் உச்சம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....