Monday, March 18, 2024
மேலும்
  Homeசெய்திகள்அரசியல்நாங்கள் சட்டத்தின் ஆட்சியை கொடுத்தோம்: ஆனால், திமுக? எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!

  நாங்கள் சட்டத்தின் ஆட்சியை கொடுத்தோம்: ஆனால், திமுக? எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!

  தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளுங்கட்சியை, எதிர்க்கட்சி விமர்சிப்பதும், எதிர்ப்பு தெரிவிப்பதும் வழக்கமான ஒன்று தான். இந்நிலையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, சந்தி சிரிக்கிறது என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

  முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேலும் கூறுகையில், அ.தி.மு.க., தமிழக சட்டசபையில் எவ்வாறு செயல்படுகிறது என்பது, தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். அ.தி.மு.க.,வுக்கு சான்று அளிக்க வேண்டிய அவசியம், தமிழகத்தின் பா.ஜ., துணைத் தலைவர் துரைசாமிக்க இல்லை. நாங்கள் மக்களுடைய பிரச்னைகளை, புள்ளி விபரங்களுடன் மிகச் சரியாக சட்டசபையில் தெரிவித்து வருகிறோம்.

  வி.பி.துரைசாமி, எந்த கட்சியிலிருந்து, பா.ஜ.க.,வுக்கு போனார் என்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். நான், 48 ஆண்டுகளாக ஒரே கட்சியில் (அதிமுக) உள்ளேன். அவரைப் போல் அடிக்கடி கட்சி மாறுபவன் நானல்ல. தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் வளர வேண்டும் என்று தான் நினைக்கிறேன். ஆனால், பா.ஜ.க., வளர்ந்துள்ளதா என்பது கற்பனையான கேள்வி தான்.

  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால், தமிழகத்தில் கொலை மற்றும் கொள்ளை நடக்காத நாள் இல்லை. வழிப்பறி, திருட்டு மற்றும் கட்டப்பஞ்சாயத்து தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.

  ஓராண்டில் ஏராளமான கொலைகள், கொள்ளைகள் மற்றும் செயின் பறிப்புகள் நடந்துள்ளன. மக்கள் நிம்மதியாக சாலையில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. இதையெல்லாம் தட்டி கேட்க திறமை இல்லாத அரசாக, தி.மு.க., அரசு இருக்கிறது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு என்புது அறவே இல்லை. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை. இன்னமும் தொடர் கற்பழிப்புகள் அரங்கேறுகிறது. இதனைத் தடுக்க தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், முறையாக கவனிக்காததால் தான், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

  அ.தி.மு.க., ஆட்சியில், சட்டத்தின் உண்மையான ஆட்சி நடந்தது. குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுத்து வந்தோம். அரசியல் தலையீடு என்பது அறவே இல்லை. ஆனால் தி.மு.க.,வினரோ, ஆங்காங்கே காவல் நிலையத்தில் தலையிட்டு, குற்றவாளிகளை காப்பாற்றி வருகின்றனர். இதனால், குற்றங்கள் குறையாமல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

  போதைப் பொருள் மற்றும் கஞ்சா விற்காத இடம் இல்லை. தமிழக அரசால், இதன் விற்பனையை தடுத்து நிறுத்த முடியாத சூழல் உள்ளது. ஆளும் கட்சியினரே, கஞ்சா விற்பவர்களுக்கு துணையாக நிற்கையில், காவல் துறையால் குற்றவாளிகளை எப்படி தடுக்க முடியவில்லை.

  முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தன் மகனுக்கு அமைச்சர் பதவி கொடுத்து விட்டால், பல்வேறு விமர்சனங்கள் வரும் என்பதால், கொல்லைப்புற வழியாக அமைச்சராக்க முயற்சி செய்கிறார். எனவே, பல இடங்களில் தீர்மானம் போடுகினறனர் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

  டாஸ்மாக்கை திறந்து அதற்கு போலீஸ் காவல் போட்டது, திமுக! – சசிகலா புஷ்பா!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....