Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஏலியன் பூமிக்கு வர.....அழகியலால் ஆன துயரம்தான் 'அரைவல்' திரைப்படம்! - ஒருபக்க பார்வை!

    ஏலியன் பூமிக்கு வர…..அழகியலால் ஆன துயரம்தான் ‘அரைவல்’ திரைப்படம்! – ஒருபக்க பார்வை!

    ஒரு திரைப்படம் அதன் திரைமொழி வழியாக நம்மிடம் என்ன வேண்டுமானாலும் கடத்தலாம். சிரிப்பை, அழுகையை, துயரத்தை, வன்மத்தை, அன்பை, வலியை என உலகின் அனைத்து உணர்வுகளையும் நமக்கு கடத்தும் திறனை படைத்தது திரைப்படங்கள். 

    அப்படியான உணர்வுகளின் தெறிப்பை அரைவல் திரைப்படமும் நிகழ்த்தி இருக்கிறது. அதன் மையப்பகுதியை வைத்துக்கொண்டு எப்படி வேண்டுமானாலும் திரைக்கதையை செலுத்தி இருக்கலாம். ஆனால் அரைவல், தான் திரைக்கதையை செலுத்தி இருக்கும் விதத்தில் தான் வேறுபட்டு இருக்கிறது. அவ்விடத்தில்தான் அரைவல் உச்சியில் சென்று நிற்கிறது.

    அரைவல் தன் கதைப் பயணத்தை ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே, நம்மை அதன் துயரப்பகுதிக்குள் முதலில் ஈர்த்துக்கொள்கிறது. நாம் அந்த துயரத்தை சில நிமிடங்களிலேயே புரிந்துக்கொண்டு, அக்காட்சியை நம் மனதுக்குள் உள்வாங்க செய்ததில் மிக முக்கிய பங்கு, ஜொஹான் ஜோஹன்சனின் இசைக்குத்தான். ஒரு துளியாக ஆரம்பித்த காட்சி நிறைவுபெறும் தருவாயில் பெரு துளியாக உள்ளுக்குள் முடிவது இசையின் அடித்தளத்தில்தான்.

    arrival

    ‘ஏலியன் பூமிக்கு வருகிறது’ என்ற ஒற்றை வரியை சொன்னால் நமக்குள் தோன்றும் காட்சிகள் எல்லாம், மிகவும் பிரம்மாண்டங்களாகவே எழுகின்றன. அந்த பிரம்மாண்டங்களின் ஊடே ஆக்ஷன் காட்சிகளும் தவிர்க்க முடியாதபடி சேர்ந்து விடுகின்றன. இன்னும் கொஞ்சம் உள் சென்றால் எமோஷனல் காட்சிகள் உமிழுகின்றன. இப்படித்தான் பெரும்பாலும் எலியன் கதைகள் நமக்கு காண்பிக்கப்படுகின்றன,தோன்றுகின்றன. இவற்றிலிருந்தெல்லாம் முழுமையாக விலகாமல் அதே சமயம் அதனூடே செல்லாமல் நிகழ்ந்த கதைதான் அரைவல்.

    ஒவ்வொரு முறை ஏலியன்களுடன் கதையின் முன் பாத்திரமான லூயிஸ் உரையாடலை மேற்கொள்ளும்போதும் அடுத்து என்ன என்ற சுவாரஸ்யம் மட்டும் தோன்றாமல் அந்த நொடியின் நீளத்தை வேகமாக நகர்த்த வேண்டாம் என்றும் தோன்றிவிடுகிறது. 

    மொழியும் எழுத்தும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள எவ்வளவு முக்கியமானதென்று காட்சிகளின் வீரியம் தெரியப்படுத்துகிறது. படம் முடிந்த பிறகு யோசித்து பார்த்தால் ஒவ்வொரு முறையும் பிரம்மாண்டங்களை ஆக்ஷன் காட்சியின் மூலம் மேலோங்கியபடியே காண்பித்திருக்கலாம். ஆனால், அவர்கள் அப்படி காட்டவில்லை. படம் பார்க்கும்போது நமக்கும் அப்படி தோன்றவில்லை. 

    கண்களுக்கு முன்னே நம் எதிர்காலம் விரிவடையும் போது……..விரியும் எதிர்காலம், சிதையும் என்பதை அறிந்தும் …நாம் அந்த எதிர்காலத்தை மேற்கொள்வோமா?

    arrival

    ‘நாளை நான் சிதையப்போகும் அந்த இடத்தில் இருந்துதான் இன்று சூரியகாந்திகள் அழகாக பரவசமாக மேலெழுகின்றன ‘ என்ற கூற்றின்படி, எதிர்காலம் சிதைவதாய் அறிந்தும் வரப்போகும் அழகியல்களை பரவசங்களை கதையின் முன் பாத்திரமான லூயிஸ் ஏற்பது அழகியல்களால் ஆன துயரம். ‘நான் தூக்கி வளர்த்த துயரம் நீ’ என்ற வைரமுத்துவின் ஒரு வரிதான் நியாபகத்திற்கு வருகிறது.

    இசையையும், ஒளி ஒலிப் பதிவுகளையும், படத்தொகுப்பையும் வியக்காமல் படத்தை விட்டு நகரமுடியவில்லை. டெனிஸ் வில்லெனுவேவின் இயக்கத்தை, அவர் இக்கதைக்கு கொடுத்திருக்க கூடிய முக்கியத்துவத்தை உணராமல் நம்மால் வெளிவர இயலாது. ஒரு எழுத்தாளனின் தேவையை இப்படத்தின் மூலம் எரிக் ஹெய்ஸரர் எழுத்தாளன் அற்று பயணிக்கும் மற்றவர்களுக்கு கூறியிருக்கிறார். 

    நீங்கள் வியக்கக்கூடிய எந்த ஒரு காட்சியையும் நாங்கள் இதில் விவரிக்கவில்லை. ஒரு திரைப்படம் பார்த்து மேலோட்டமாய் வியப்பது மட்டுமல்லாமல் ஆழ் மனமும் வியக்க விரும்பினால், நெட்ஃப்ளிக்ஸில் அரைவல் ஓடிக்கொண்டிருக்கிறது.

    மாமன்னன் திரைப்படத்தில் மிஷ்கினா? வெளியான புகைப்படம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....