Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதாமதமான விமானம் - வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள்; சிற்றுண்டி தந்த நிர்வாகம்!

    தாமதமான விமானம் – வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள்; சிற்றுண்டி தந்த நிர்வாகம்!

    விமானத்தில் அடிக்கடி திடீரென இயந்திரக் கோளாறு ஏற்படுவது சகஜம் தான். ஆனால், இந்த திடீர் கோளாறால் பயணிகள் தான் அதிக சிரமத்திற்கு உள்ளாவார்கள். இதுபோன்ற ஒரு சம்பவம் தான் நேற்று சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து சிங்கப்பூர் வரை செல்லும் விமானத்தில், திடீா் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனால், விமானம் புறப்பட தாமதமானது. இந்த தாமதத்தால், பயணிகள் விமான நிலையத்தில் பல மணி நேரங்கள் தவிப்புக்கு ஆளாகினர்.

    சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், நேற்று இரவு 9.45 மணிக்கு சென்னையிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட தயார் நிலையில் இருந்தது. இந்த விமானத்தில் 98 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் உள்பட, மொத்தம் 104 நபர்களுடன் விமானம் புறப்பட இருந்தது. பயணிகள் விமானம் ஓடுபாதையில் புறப்பட்ட போது, திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனை உடனே கண்டுபிடித்து விட்ட விமானி, துரிதமாக செயல்பட்டு, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். பிறகு, விமானம் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. அங்கிருந்து பயணிகள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டனர்.

    பயணிகள் அனைவரும் இறங்கிய பின்பு, இழுவை வாகனத்தைப் பயன்படுத்தி, அந்த பயணிகள் விமானம் புறப்பட்ட இடத்திலேயே மீண்டும் இழுத்து வரப்பட்டு நிறுத்தப்பட்டது.

    பிறகு, விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு சரிசெய்யப்பட்டு, விமானமானது இன்று அதிகாலை 2 மணிக்கு புறப்படும் என்று பயணிகளிடம் தெரிவிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் இருந்த ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனா். ஆனால், சொன்னபடி அதிகாலை 2 மணிக்கு விமானம் புறப்படவில்லை. அதன்பின் விமானம் 4 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்திலும் விமானம் புறப்படாததால், கோபமடைந்த பயணிகள் விமான நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

    பிறகு, பயணிகளுக்கு டீ, காபி மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதோடு, இன்று பகல் 12 மணிக்கு மேலாக விமானம் புறப்பட்டு சிங்கப்பூரைச் சென்றடையும் என மீண்டும் அறிவிக்கப்பட்டது. இயந்திரக் கோளாறை விமானி தக்க சமயத்தில் கண்டுபிடித்து, உடனே விமானத்தை நிறுத்தியதால் பெரும் விபத்தும், உயிர்ச் சேதமும் தவிர்க்கப்பட்டது. அதேநேரம் பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டது. சிங்கப்பூர் செல்ல வேண்டிய 98 பயணிகளும் சென்னை விமான நிலையத்தில் பல மணி நேரங்கள் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டது.

    அரசுப் பள்ளிகளில் இனி சி.பி.எஸ்.இ பாடத் திட்டமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....