Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாவிருப்பத்துடன் மதமாற்றம் செய்யத் தடையில்லை: கட்டாய மதமாற்றமே குற்றம்!

    விருப்பத்துடன் மதமாற்றம் செய்யத் தடையில்லை: கட்டாய மதமாற்றமே குற்றம்!

    இந்தியாவில் மதமாற்ற முயற்சிகள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. ஏழை, எளியவர்களின் அசாதாரண சூழலைப் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சில மத போதகர்கள், மதம் மாற்ற முயற்சி செய்கின்றனர்.
    அண்டை மாநிலமான கர்நாடகாவில், கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டம் இயற்றியுள்ளது. இந்நிலையில், தமிழகத்திலும் கட்டாய மதமாற்றங்கள் யாரும் அறியா வண்ணம் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பு கவனிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது.
    கட்டாயப்படுத்தப்படாமல், சுய விருப்பத்துடன் மதம் மாறுவதற்கு சட்டப்படி தடையில்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதிலிருந்து, கட்டாய மதமாற்றம் சட்டப்படி குற்றம் என்பது நமக்குத் தெளிவாகிறது. விருப்பம் இல்லாத சூழலில், சிலருடைய கட்டாயத்தின் பேரில் மதமாற்றம் நிகழ்ந்தால், அதனை உடனே காவல் துறைக்கு தெரிவித்து புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    பாஜக கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார், பணம் மற்றும் பரிசு பொருட்கள் ஆகியவற்றை அளித்து, மதம் மாற்ற முயற்சிப்பது நமது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று அறிவிக்க கோரி, பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
    டெல்லி உயர்நீதிமன்றத்தில், இந்த மனுவை நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது நீதிபதிகள் மனுவைப் பரிசீலித்தனர். அதிகளவில் கட்டாய மதமாற்றங்கள் நடப்பதாக மனுவில் கூறப்பட்டிருந்தது‌. அதற்கான ஆதாரங்கள்  எங்கே என்று கேட்டனர் நீதிபதிகள்.
    பாதிக்கப்பட்டவர்கள் எவரேனும் வழக்குத் தொடர்ந்துள்ளனரா என்றும் கேள்வி எழுப்பினார்கள். மேலும், சமூக ஊடகங்களில் கூறப்பட்டுள்ளவற்றை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தனர். கட்டாயமில்லாமல், மதம் மாறுவதற்கு சட்டப்படி எந்தவித தடையுமில்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.
    மேலும், ஒருவர் தான் விரும்பும் எந்த மதத்தையும் பின்பற்ற அரசியலமைப்புச் சட்டத்தில் உரிமை அளிக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பான விரிவான விசாரணையை வருகின்ற ஜூலை 25 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து எந்த வித நோட்டீஸையும் பிறப்பிக்காமல் உத்தரவிட்டுள்ளனர்.
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....