Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாடிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால்....இனி அவ்வளவுதான்!

    டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால்….இனி அவ்வளவுதான்!

    பலர் பேருந்து மற்றும் விமான பயணத்தை விட ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். ரயில் டிக்கெட் விலை குறைவாக உள்ளது, நீங்கள் மிக வேகமாகவும், பாதுகாப்பாகவும், வசதியாகவும் பயணிக்கலாம். தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணிக்கின்றனர்.

    தினமும் விரைவு, மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளும் இணைத்து இயக்கப்படுகின்றன. ஆனாலும், பயணியர் சிலர் டிக்கெட் எடுக்காமல் அல்லது உரிய டிக்கெட் இல்லாமல் முன்பதிவு பெட்டிகளில் பயணித்து வருகின்றனர். இதனால், முன்பதிவு செய்து பயணிப்போருக்கு இடையூறாக உள்ளது. சில நேரங்களில் திருட்டு சம்பவங்களும், நடப்பதாக பயணியர் புகார் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: விரைவு ரயில்கள் புறப்படும் போது, ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்துகின்றனர். பின், டிக்கெட் பரிசோதகர்களும் சோதனை மேற்கொள்கின்றனர். இருப்பினும், சிலர் முன்பதிவு பெட்டிகளில் ஏறி பயணம் செய்து வருகின்றனர்.

    எனவே, ஓடும் ரயில்களில் திடீரென சோதனை நடத்தும் வகையில், ‘டிக்கெட் பரிசோதகர்கள்’ குழு அமைத்து கண்காணிக்கும் பணிகளும் நடந்து வருகிறது. முன்பதிவு பெட்டிகளில், உரிய டிக்கெட் இல்லாமல் பயணிப்போரிடம், 1,000 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும். எனவே, உரிய டிக்கெட் இன்றி, முன்பதிவு பெட்டிகளில் பயணிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதே போன்று பயணத்தின் போது உங்களிடம் டிக்கெட் இல்லை என்றால், ரயில்வே சட்டம் 138வது பிரிவின் கீழ், உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிரிவின் கீழ், நீங்கள் பயணித்த தூரத்திற்கு ரயில்வேயால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் அல்லது ரயில் புறப்பட்ட நிலையத்திலிருந்து செல்லும் தூரத்திற்கு நிலையான எளிய கட்டணம் மற்றும் ரூ.250 அபராதம் விதிக்கப்படும். உங்களிடம் குறைந்த வகுப்பு டிக்கெட் இருந்தால், கட்டண வித்தியாசமும் வசூலிக்கப்படும்.

    இது தவிர, பயணச்சீட்டில் குளறுபடி செய்து பயணித்தால் ரயில்வே சட்டம் 137வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். இதில், பயணிக்கு 6 மாதம் சிறை தண்டனை, 1000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

    தலைவரானார் அன்புமணி இராமதாஸ்; இனி பாமகவின் 2.0 வெர்ஷன் ஆரம்பம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....