Monday, March 18, 2024
மேலும்
  Homeசெய்திகள்அரசியல்தலைவரானார் அன்புமணி இராமதாஸ்; இனி பாமகவின் 2.0 வெர்ஷன் ஆரம்பம்!

  தலைவரானார் அன்புமணி இராமதாஸ்; இனி பாமகவின் 2.0 வெர்ஷன் ஆரம்பம்!

  தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத கட்சிகளில் ஒன்று பா.ம.க., 1989-ம் ஆண்டு உதயமானது. வன்னியர் சமூக மக்களின் முன்னேற்றத்துக்காக தொடங்கப்பட்ட வன்னியர் சங்கத்தை, பா.ம.க. என்ற அரசியல் கட்சியாக டாக்டர் ராமதாஸ் தொடங்கினார்.

  பா.ம.க.வை பொறுத்தவரையில் அக்கட்சியின் நட்சத்திர முகமாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறியப்படுகிறார். சமீபகாலங்களில் அன்புமணி ராமதாஸின் ‘ஹைடெக்’ தேர்தல் பிரசாரம், புள்ளிவிவர பேச்சுகள், கட்சியில் அவரது செயல்பாடுகள் இவை அனைத்துமே அவரை அரசியல் அரங்கில் வெகுவாக பேசவைத்திருக்கிறது.

  2004-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க போட்டியிட்ட 6 இடங்களிலும் வென்றது. இதில் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு சுகாதாரத்துறை மந்திரியாக பதவியேற்றுக்கொண்டனர்.

  மந்திரியாக பதவி வகித்த காலத்தில் இந்தியாவில் முதன்முறையாக 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பொது இடங்களில் புகைபிடிக்க தடைச்சட்டம் இயற்றியது, புகையிலை பொருட்கள் மீது எச்சரிக்கை படம் அச்சடித்தது, தேசிய மருந்துகள் ஆணையம் அமைக்கப்பட்டது இவரது துறையின் சாதனை ஆகும்.

  இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை 11.00 மணிக்கு சென்னையை அடுத்த திருவேற்காடு ஜி.பி.என். பேலஸ் திருமண அரங்கத்தில் தொடங்கியது.

  பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் , பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்றார். பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

  இந்த கூட்டத்தில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு காரணம், உள்ளாட்சி தேர்தலில் கட்சியினரே துரோகம் செய்தது , போட்டியிடுவதற்குக் கூட ஆட்கள் இல்லாத நிலைமை ஏற்பட்டது போன்ற சம்பவங்கள் தான். சமீப காலமாக நடந்து வரும் பாமக கூட்டங்களில், தன்னுடைய வேதனையும், அதிருப்தியும் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளிப்படுத்தியே வருகிறார்..

  எனவேதான், தான் உயிருடன் இருக்கும்போதே அன்புமணியை கோட்டையில் உட்கார வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை மீண்டும் கட்சிக்குள் டாக்டர் ராமதாஸ் ஆழமாக வேரூன்றி வருகிறார்.

  தமிழகம், புதுச்சேரியில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், அணிகள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று ஜி.கே.மணி ஸ்பெஷலாக அழைப்பு விடுத்துள்ளார்.

  இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அன்புமணி ராமதாஸ் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திக்க உள்ளார் என கூறப்படுகிறது.

  பெங்களூரு அணிக்கு பட்டர் கொடுத்த பட்லர்..பறிபோன கோலியின் நீண்ட நாள் கனவு !

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....