Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஒரே நாளில் மும்மத வழிபாடு...யாத்திரையில் ராகுல் செய்த சம்பவம்!

    ஒரே நாளில் மும்மத வழிபாடு…யாத்திரையில் ராகுல் செய்த சம்பவம்!

    காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி ஒரே நாளில் இந்து மடம், தேவாலயம், மசூதி போன்ற புனித தலங்களுக்கு சென்றுள்ளார். 

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தற்போது பாரத் ஜோடோ யாத்திரை (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற ஒன்றை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தொடங்கியுள்ளார். இதன் நோக்கம் என்னவெனில் இந்தியாவை இணைக்க வேண்டும் என்பதே ஆகும். 

    ராகுல் காந்தியின் இந்த பயணம் 150 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த யாத்திரையின் 26-வது நாளான இன்று அக்டோபர் 3-ம் தேதி கர்நாடகா மாநிலம் மைசூரில் ஒரே நாளில் இந்து மடம், தேவாலயம், மசூதி போன்ற புனித தலங்களுக்கு சென்றுள்ளார். மைசூரில் உள்ள சுத்தூர் மடத்துக்கு சென்ற ராகுல், ஶ்ரீ சிவராத்திரி தேசிகேந்திர சுவாமிகளை சந்தித்து ஆசிப்பெற்றார். 

    இது சார்ந்த புகைப்படங்களை, தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்த ராகுல், ‘எல்லா மத வழி தர்மங்களும் சமம். எல்லா தர்மங்களுடனான நல்லிணக்கமே இந்தியாவின் அமைதியான மற்றும் முற்போக்கான எதிர்காலத்தின் அடித்தளம்’ எனப் பதிவிட்டுள்ளார். 

    இதையும் படிங்க: 9 ஆம் நூற்றாண்டை கண் முன் நிறுத்திய மணிரத்னம்! பொன்னியின் செல்வன் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....