Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா300 யூனிட் மின்சாரம் இலவசம் : பஞ்சாப் அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு!

    300 யூனிட் மின்சாரம் இலவசம் : பஞ்சாப் அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு!

    ஜூலை மாதத்தின் முதல் தேதியில் இருந்து பஞ்சாப்பில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அங்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. இந்த தகவலை அந்த மாநிலத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. 

    அந்த மாநிலத்தின் முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் பதவியேற்று ஒரு மாதம் முடிவடைந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

    இந்த மாதத்தில் ஒரு முக்கிய அறிவிப்பு அரசாங்கத்தால் வெளியிடப்பட இருப்பதாக பஞ்சாப் மாநிலத்தில் செய்திகள் பரவியது. முதல்வர் பகவந்த் மானும் பஞ்சாப் மக்களுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்து இருந்தார். 

    இந்த கருத்தை ட்விட்டரில் பகிர்ந்து இருந்த பகவந்த் மான் , எங்கள் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுடன் அருமையான சந்திப்பு நடந்தது. இதன் அடிப்படையில் இந்த மாதம் பஞ்சாப் மக்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்து சேரும் என்று தெரிவித்து இருந்தார். 

    ஆம் ஆத்மி அரசு தன்னுடைய தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தது. இதன் அடிப்படையிலேயே இந்த வாக்குறுதி தற்பொழுது நிறைவேற்றப்பட்டுள்ளது. 

    இந்த தேர்தல் வாக்குறுதியை அளிப்பதற்கு முன்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மாநிலத்தில் உபரி மின்சாரம் இருக்கின்ற போதிலும், மின்வெட்டு நிகழ்கிறது என்று தெரிவித்து இருந்தார். மேலும், மின்கட்டணங்களும் அதிகமாக உள்ளதாக தெரிவித்து இருந்தார். 

    கிராமங்களில் உள்ள மக்களுக்கு முறையாக மின்கட்டணங்கள் அனுப்பப்படுவதில்லை. இதனால் அவர்கள்  மின்கட்டணங்கள் செலுத்துவதில்லை. அதனால் மின்சார இணைப்பு துண்டிக்கப்படுகிறது. இது மின்சாரம் திருடுவது போன்ற தவறான செயல்களுக்கு வழிவகுக்கிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி இருந்தார்.

    டெல்லியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழக்கப்பட்டு வருகிறது. சென்ற மாதம் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டுக்கே ரேஷன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருந்தார். அது அவர்க்ளின் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய அறிவிப்பாக இருந்தது. 

    கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி, தன்னுடைய முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் 25,000 அரசுப் பணியிடங்களை புதிதாக தொடங்கி வைத்தார். இதில், காவல் துறையில் மட்டும் 10000 பணியிடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....