Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபவுலிங்கில் மட்டுமல்ல பேட்டிங்கிலும் நாங்க கெத்துதான் - நிரூபித்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத்!

    பவுலிங்கில் மட்டுமல்ல பேட்டிங்கிலும் நாங்க கெத்துதான் – நிரூபித்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத்!

    நேற்று கொல்கத்தாவுக்கும், ஹைதராபாத்துக்கும் நடைபெற்ற போட்டியானது ரன் மழைகளால் அதிர்ந்தது என்றே கூற வேண்டும். 

    டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆகவே, கொல்கத்தா அணியானது முதலில் பேட்டிங்கில் களம் கண்டது. தொடக்க ஜோடிகளாக களமிறங்கிய ஃபின்ச் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரின் மீதும் பெரிய எதிர்ப்பார்பு இருக்க, அந்த எதிர்ப்பார்ப்பு பொய்யானது. ஆம்! இருவருமே சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

    இதன்பிறகு,  கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். நிதானமாக இவர் ஆட்டத்தை தொடங்க, இவருக்கு உறுதுணையாக சுனில் நரைன் இருப்பார் என்று எதிர்ப்பார்க்கபட, அவர் ஆறு ரன்களில் பெவிலியன் நோக்கி நடை கட்டினார். 

    கடந்த போட்டிகளில் பெரிதும் சோபிக்காத நிதிஷ் ராணா, நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணிக்கு ஆறுதல் தந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் நிதிஷ் ராணா ஜோடி நிதானமாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், 28 ரன்கள் சேர்த்திருந்தபோது ஷ்ரேயாஸ் ஐயர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

    இதன்பிறகு களமிறங்கிய ஜாக்சன் 7 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுக்க களத்திற்கு ரஸல் விளையாட வந்தார். இதன் பிறகு கொல்கத்தா அணியின் ரன்களில் வேகம் எட்டப்பட்டது. நிதிஷ் ராணா 36 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.  ரஸல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 25 பந்துகளுக்கு 49 ரன்கள் எடுத்தார்.

    மொத்தத்தில் இருபது ஓவர்களின் முடிவில், கொல்கத்தா அணியானது 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. 

    176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது, சன் ரைசர்ஸ் ஹைதராபாத். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா 3 ரன்களுக்கும், கேன் வில்லியம்சன் 17 ரன்களுக்கும் பெவிலியன் திரும்பினர். 

    இந்த போட்டி அவ்வளவுதான், கொல்கத்தா வெற்றி பெற்றுவிடும் என்ற கணிப்பு எழ ஆரம்பித்துவிட்டது. ஆனால், தொடக்க ஜோடிக்குப் பிறகு களமிறங்கிய ராகுல் திரிபாதி மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகிய இருவரும் ‘பலே’ என்ற வார்த்தையை ரசிகர்களை அவ்வபோது உபயோகிக்க வைத்துவிட்டனர். 

    இந்த ஜோடியைப் பிரிக்க கொல்கத்தா அணி மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் வீணாகின. ராகுல் திரிபாதி மற்றும் எய்டன் மார்க்ரம் இருவரும் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். இறுதியாக, ராகுல் திரிபாதி 37 பந்துகளுக்கு 71 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 

    எய்டன் மார்க்ரம் 68 ரன்களுடனும், நிக்கோலஸ் பூரான் 5 ரன்களுடன் களத்தில் இருக்கிற பொழுதே, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது தனது வெற்றியை ருசித்துவிட்டது. வெறுமனே, மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 17.5 ஓவர்களிலேயே 176 என்ற வெற்றி இலக்கை அடைந்தது, ஹைதராபாத்.

    ராகுல் திரிபாதி ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....