Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஆற்றில் இறங்கிய கள்ளழகர்; உணர்ச்சிப் பொங்க கண்டுகளித்த பக்தர்கள்!

    ஆற்றில் இறங்கிய கள்ளழகர்; உணர்ச்சிப் பொங்க கண்டுகளித்த பக்தர்கள்!

    மதுரை சித்ரா பௌர்ணமி திருவிழாவில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் இன்று அதிகாலை தொடங்கியது. 

    ஏப்ரல் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது மதுரை சித்திரை திருவிழா. நேற்று முன்தினம் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருகல்யாணம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. இத்திருமணத்தை பல ஆயிரக் கணக்கில் மக்கள் நேரடியாக கண்டு களித்தனர். நேரில் செல்ல முடியாதோர் நேரலை ஒளிபரப்பின் மூலமாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வை கண்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு பின் பெருந்தொற்று சற்று குறைந்துள்ள நிலையில் பொது மக்களுக்கு விழாவைக் காண அனுமதிக்கபட்டுள்ளது. 

    வள்ளியங்குன்றம் ஜமீன் கள்ளழகரை வழியனுப்பி வைக்க, ஏப்ரல் 14 நாள் இரவு 5 நாள் பயணமாக கள்ளழகர் கோவிலில் இருந்து புறப்பட்டார். மண்டூக முனிவருக்கு சாப விமோச்சனம் அளிப்பதற்காகவும் தலாக்குளம் ஸ்ரீவல்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து வைகை ஆற்றில் இறங்குவதற்காவும் கள்ளழகர் புறப்பாடு நடைபெறுகிறது. 

    கள்ளழகர் பச்சை நிற ஆடை உடுத்தி மக்களுக்கு காட்சியளித்தார். இயற்கை வளம் பெருகி அனைவரும் செழிப்புடன் இருக்க இவ்வாறு பச்சை பட்டாடையை உடுத்தி காட்சியளிக்கிறார் என்பது நம்பிக்கை. மேலும் கள்ளழகரின் ஒரு கையில் வளரித்தடியும் இன்னொரு கையில் சாட்டைக்கம்பும் ஏந்தி வந்தார். மக்கள் அவரின் மீது தண்ணீரை பீச்சி அடித்து வரவேற்றனர். வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்க, வண்டியூர் வீரராகவப் பெருமாள் வரவேற்றார். 

    வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவதற்கென தனியாக தொட்டி போன்ற அமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் ஆற்றில் வெள்ளப் பேருக்கு அதிகமாக இருப்பதால் பக்தர்களுக்கு ஆற்றில் இறங்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தடுப்புகள் போடப்பட்டு அதன் அருகிலே நின்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் அழகை பொது மக்கள்  இரசித்தனர். கள்ளழகர் மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

    இதன் பிறகு, நாளை (ஏப்ரல் 17) மண்டூக முனிவருக்கு சாப விமோச்சனம் அளிக்கும் நிகழ்வும் இராமராயர் மண்டகப்படியில் தசாவதார நிகழ்வும் நடைபெறும். அனைத்து நிகழ்வுகளும் முடிந்த பிறகு, ஏப்ரல் 19 ஆம் தேதி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மதுரையிலிருந்து அழகர் கோவிலுக்கு திரும்பிச் செல்வார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....