Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமருத்துவரை கரம் பிடித்த பஞ்சாப் முதல்வர்!

    மருத்துவரை கரம் பிடித்த பஞ்சாப் முதல்வர்!

    பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்னுக்கும் மருத்துவர் குர்பிரீத் என்பவருக்கும் மிக எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. 

    பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்னுக்கும் மருத்துவர் குர்பிரீத் என்பவருக்கும் நேற்று திடீரென திருமண அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இன்று இவர்கள் இருவருக்கும் சண்டிகரில் உள்ள இல்லத்தில் மிக எளிமையாக சீக்கிய பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. 

    இத்திருமணத்தில், தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துக் கொண்டார். மேலும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர். 

    முதல்வர் பகவந்த் மான்னுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, கடந்த 2015 ஆம் ஆண்டு விவாகரத்தும் நடந்தது. இவரின் முதல் மனைவி மூலம் 21 வயதுடைய சீரத் என்ற மகளும், 17 வயதுடைய , தில்ஷன் என்ற மகனும் உள்ளனர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....