Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் இனி முகக்கவசம் கட்டாயம்- மீறினால் அபராதம்

    சென்னையில் இனி முகக்கவசம் கட்டாயம்- மீறினால் அபராதம்

    சென்னையில் ரயிலில் பயணிப்பவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. பரவல் அதிகமாக இருக்கும் பகுதிகளில் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

    இந்நிலையில், சென்னை மாநகராட்சி, பொது இடங்களுக்குச் செல்லும் மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

    இந்த உத்தரவினை அடுத்து, முகக்கவசம் அணியாதவர்களுக்கு ருபாய் 500 அபராதமாக வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்தது. 

    சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:

    பொதுமக்கள் அதிகம் புழங்கும் இடங்களான, மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்குச் செல்லும் போது தவறாமல் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

    வணிக நிறுவனங்கள் தங்களுடைய கடைகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்த்து, சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். மேலும், வணிக வளாகங்கள், திரையரங்குகள், துணிக் கடைகள் போன்ற வணிக நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை அந்தந்த நிறுவனமே உறுதி செய்யவேண்டும்.

    மேற்கண்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ள மாநகராட்சியின் சார்பில் சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்கள் ஆய்வில் ஈடுபடும்போது, முகக்கவசம் அணியாமல் எவரேனும் இருந்தால், அவர்களிடம் ரூபாய் 500 அபராதமாக விதிக்கப்படும்.

    பெருநகர சென்னை மாநகராட்சியில் கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், பொது இடங்களில் முகக் கவசம் அணியாத நபர்களுக்கு புதன் கிழமை (06.07.2022) முதல் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1993ன் படி, ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் எனவும் இந்த அறிக்கையின் படி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை அடுத்து கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு இன்று (ஜூலை 07) முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக சென்னை மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளது.

    கொரோனா தொற்றுக்கு தொடர்ந்து பலியாகும் உயிர்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....