Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அதிமுக சின்னத்தை முடக்க கோரிய வழக்கு- ரூ.25,000 அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம்

    அதிமுக சின்னத்தை முடக்க கோரிய வழக்கு- ரூ.25,000 அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம்

    அதிமுகவின் சின்னத்தை மூடக்கக்கோரிய வழக்கை ருபாய் 25,000 அபாரதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அதிமுகவில் உள்கட்சிபூசல் நடைபெற்று வருவதால், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை அதிமுக முன்னாள் உறுப்பினரும், ஜே.ஜே. கட்சியின் நிறுவனருமான பி.ஏ.ஜோசப் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அதிமுகவின் சின்னத்தைக் கைப்பற்றுவதற்கு எடப்பாடி பழனிசாமி 5000 கோடி செலவு செய்துள்ளதாகவும்,  ஜூலை 11ம் தேதி பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக, பல கோடி ரூபாய்களை செலவு செய்துள்ளதாகவும் வாரம் இருமுறை வெளியாகும் பத்திரிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே இரட்டை இல்லை சின்னத்தை முடக்கி வைத்து, அக்கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஜூன் 28ம் தேதி மனு அனுப்பியும், எந்த பதிலும் இல்லை என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ள பி.ஏ.ஜோசப், தொடர்ந்து தனது மனுவை பரிசீலித்து அதிமுகவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் கட்சியில் உறுப்பினராக உள்ளாரா என கேள்விகளை எழுப்பினர்.

    பொதுநலவழக்கு என்ற பெயரில் விளம்பரத்துக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறிய நீதிபதிகள், மனுதாரருக்கு ருபாய் 25,000 அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜிநாமா!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....