Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பஞ்சாப் சட்டசபையில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக தீர்மானம்

    பஞ்சாப் சட்டசபையில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக தீர்மானம்

    மத்தியில் ஆளும் பாஜக அரசு புதிய இராணுவ ஆட்சேர்ப்புக் கொள்கையான அக்னிபாத் திட்டத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தின் படி, இளைஞர்களுக்கு 4 ஆண்டு காலம் பணியில் இருப்பர். அதன் பிறகு, 25% பேருக்கு மட்டும் நிரந்தப் பணி கொடுக்கப்படும். இந்தத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், அக்னி பாத் திட்டத்தை எதிர்த்து, ஆம் ஆத்மி கட்சி ஆளும் பஞ்சாப் மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    மத்திய அரசு அக்னிபாத் என்ற பெயரில் புதிய இராணுவ ஆட்சேர்ப்புக் கொள்கையை அண்மையில் வெளியிட்டது. இராணுவத்தில் பணிக் காலம் 4 ஆண்டுகளாக குறைக்கப்பட்டு அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்கள் சேர்க்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் படி, வீரர்கள் அனைவரும் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள். அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து, வட இந்தியாவில் 60-க்கும் மேற்பட்ட இரயில்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பல இரயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன. இதன் காரணமாக, பல நூறு இரயில் சேவைகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தத் தாக்குதல்களால் இரயில்வே துறைக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

    அக்னி வீரர்கள், 4 வருட இராணுவப் பணி முடிந்த பிறகு என்ன செய்வார்கள்? என்ற கேள்விக்கு மத்தியில் ஆளும் பாஜக தரப்பில் இருந்து வெளியான பதில்கள், கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டது. இத்தனை எதிர்ப்புகளுக்கும் இடையேயும், தற்போது அக்னிபாத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்‌. இந்நிலையில் பஞ்சாப் மாநில சட்டசபையில், அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து இன்று ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது. பஞ்சாப் மாநில சட்டசபையில் முதல்வர் பகவந்த் மான், இந்தத் தீர்மானத்தை இன்று தாக்கல் செய்தார்.

    அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான இத்தீர்மானம் பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தை அடுத்து, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் அனைத்தும், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

    மீண்டும் உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி- கலக்கத்தில் மக்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....