Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமீண்டும் உயரும் கொரோனா தொற்று! கலங்கும் மக்கள்

    மீண்டும் உயரும் கொரோனா தொற்று! கலங்கும் மக்கள்

    நாட்டின் ஒருநாள் கொரோனா பாதிப்பு 14,506 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 18,819 ஆக அதிகரித்துள்ளது. 

    இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு 14,506 உறுதியான நிலையில், வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, புதிதாக 18,819 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,34,52,164 ஆக உயர்ந்துள்ளது. 

    தொற்று பாதிப்பு நாடு முழுவதும் 99,602-ல் இருந்து 1,04,555 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோரின்  எண்ணிக்கை 0.24 சதவிகிதமாக உள்ளது. தொற்று பாதித்தவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், நாடு முழுவதும் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,25,116 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.21 சதவிகிதமாக உள்ளது. 

    கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,827 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால், தொற்றிலிருந்து குணமானோர் எண்ணிக்கை 4,28,22,493 ஆக உயர்ந்துள்ளது. குணமானோர் எண்ணிக்கை 98.55 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    நாடு முழுவதும் இதுவரை 1,97,61,91,554 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. புதன்கிழமை மட்டும் 14,17,217 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தொற்று குறைந்து வந்த நிலையில், மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால், தமிழகத்தில் மீண்டும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    யார் அடுத்த முதல்வர்? பரபரப்பின் உச்சத்தில் மகாராஷ்டிர அரசியல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....