Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்வாடகைக்கு வீடு எடுத்து விபசாரமா? தெரிந்தே மாட்டிக்கொண்ட வங்கி மேலாளர்!

    வாடகைக்கு வீடு எடுத்து விபசாரமா? தெரிந்தே மாட்டிக்கொண்ட வங்கி மேலாளர்!

    புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் செய்ததாக ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் உள்பட 2 பேரை கைது செய்த போலீசார் 4 அழகிகளை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    புதுச்சேரி சுற்றுலா மாநிலம் என்பதால் இங்கு சமீபகாலமாக விபச்சாரம் கொடிகட்டி பறக்கிறது. அவ்வப்போது போலீசார் சோதனை. மேற்கொண்டு விபச்சாரம் நடத்துபவர்களை கைது செய்து வருகின்றனர். பெரும்பாலானோர் வீடு வாடகை எடுத்து விபச்சாரம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ரெட்டியார்பாளையம் ஜெயா நகரில் பெண்கள் தங்கி இருந்த ஒரு வீட்டுக்கு அடிக்கடி ஆண்கள் வந்து செல்வதால் சந்தேகமடைந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் போலீசார் ரரகசியமாக கண்காணித்ததில் அழகிகளை வைத்து அந்த வீட்டில் விபசாரம் நடப்பதை உறுதி செய்தனர்.

    இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் பெண் போலீசார் குறிப்பிட்ட அந்த வீட்டுக்குள் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் 5 இளம் பெண்களுடன் வாலிபர் ஒருவர் இருந்ததை தொடர்ந்து போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். இதில், கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த ரம்யா (38) என்பவர் இளம் பெண்களை வைத்து விபசார தொழில் நடத்தியதும், பிடிபட்ட வாலிபர் வாடிக்கையாளர் என்பதும் தெரியவந்தது.

    வாடகைக்கு வீடு எடுத்து ரம்யா இந்த தொழிலில் ஈடுபட்டதும் வீட்டு உரிமையாளரான ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் லட்சுமி நாராயணன் (69) என்பவருக்கு தெரிந்தே அங்கு விபசாரம் நடந்ததும் அம்பலமானது.

    இதையடுத்து ரம்யா, லட்சுமி நாராயணன் ஆகியோரை போலீசார் கைது செய்ததுடன் அங்கிருந்து 2 செல்போன்கள், ரூ.890 ரொக்கத்தை கைப்பற்றினர். மேலும் மீட்கப்பட்ட 4 அழகிகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

    52,000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் அவதார்; காத்திருப்பில்ரசிகர்கள்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....