Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவில் 3ஜி, 4ஜி மொபைல்களின் உற்பத்தி நிறுத்தமா? மத்திய அரசு கூட்டத்தில் நடந்தது என்ன?

    இந்தியாவில் 3ஜி, 4ஜி மொபைல்களின் உற்பத்தி நிறுத்தமா? மத்திய அரசு கூட்டத்தில் நடந்தது என்ன?

    3 ஜி, 4ஜி ஸ்மார்ட் போன் தயாரிப்பதை நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் என வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. 

    சமீபத்தில் பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். இந்நிலையில் 3ஜி, 4ஜி, ஸ்மார்ட் போன்கள் தயாரிப்பதை நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியானது.

    இதைத்தொடர்ந்து, 3ஜி, 4ஜி ஸ்மார்ட் போன்கள் தயாரிப்பதை நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் என வெளியான தகவல்களுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு இதுபோன்ற எந்த ஒரு உத்தரவையும் வழங்கவில்லை என விளக்கம் அளித்துள்ளது. 

    இதையும் படிங்க: ‘108 அவசர ஊர்திகளின் விரைவுப்படுத்த வேண்டியது அவசியம்’-அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்!

    தில்லியில் நேற்று மத்திய தொலை தொடர்பு செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நாட்டில் இயங்கக்கூடிய முக்கிய செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொலை தொடர்பு நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

    இதில், 5ஜி அதிவேக இணையதள சேவைக்காக மேம்படுத்தப்பட்ட மென்பொருள் அப்டேட் விரைவில் வெளியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அனைத்து 5G சாதனங்களுக்கும் மென்பொருள் FOTA புதுப்பிப்புகளைப் பயன்படுத்துவதில் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் மற்றும் டெலிகாம் ஆபரேட்டர்களின் ஈடுபாடு பற்றிய பிரச்சினையும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    தற்போது, ஆப்பிள் மற்றும் சாம்சங் உட்பட பல ஸ்மார்ட்போன் பிராண்டுகள் தேவையான OTA  புதுப்பிப்பை வரும் வாரங்கள் அல்லது மாதங்களில் வழங்குவதாக உறுதியளித்துள்ளன.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....