Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்நாட்டில் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக இருப்பது ஏன்? - ராகுல் கேள்வி

    நாட்டில் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக இருப்பது ஏன்? – ராகுல் கேள்வி

    நாட்டில் பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக இருப்பது ஏன்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைக்கான யாத்திரை என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கிய அவர், கேரளாவை தொடர்ந்து தற்போது, கர்நாடக மாநிலத்தில் மேற்கொண்டு வருகிறார். 

    இதனிடையே, நாட்டில் பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக இருப்பது ஏன்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

    இது தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 

    35 ஆண்டுகளில் பணவீக்கம் அதிகமாக உள்ளது ஏன்?

    45 ஆண்டுகளில் வேலையின்மை அதிகமாக உள்ளது ஏன்? 

    பரோட்டாக்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவது ஏன்? 

    விவசாய டிராக்டர்களுக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவது ஏன்? 

    பிரதமர் அவர்களே, பாரத் ஜோடோ யாத்திரை இந்தக் கேள்விகளையும் இன்னும் பல கேள்விகளையும் உங்களிடம் கேட்கும். இதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும். 

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ‘அவன ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கணும்’ – மாணவி கொலை குறித்து விஜய் ஆண்டனி ஆவேச ட்விட்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....