Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஉலகக் கோப்பை போட்டியில் பும்ரா இல்லை...ஆனால் அவரின் இடம் இவருக்குத்தான்!

    உலகக் கோப்பை போட்டியில் பும்ரா இல்லை…ஆனால் அவரின் இடம் இவருக்குத்தான்!

    இந்திய அணியிலிருந்து காயம் காரணமாக பும்ரா விலகிய நிலையில் தற்போது முகமது ஷமிக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

    இருபது ஓவர் உலகக் கோப்பை தொடரின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாக உச்ச நிலையை அடைந்து வருகிறது. நாளை மறுநாள் 2022-ம் ஆண்டுக்கான இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் ஆரம்பமாகிறது. இந்த உலகக் கோப்பைப் போட்டியானது நவம்பர் 13 வரை நடைபெறுகிறது. 

    இந்த இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி உள்ளிட்ட நகரங்களில் மொத்தமாக 45 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

    மேலும், நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று நவம்பர் 13-ம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. 

    இதையும் படிங்க: ‘108 அவசர ஊர்திகளின் விரைவுப்படுத்த வேண்டியது அவசியம்’-அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்!

    இந்நிலையில், இந்திய அணிச் சார்பில் விளையாடவிருந்த வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக உலகக் கோப்பைத் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து யார் இந்திய அணியில் இடம்பெறுவார் என்ற கேள்வி தொடர்ந்து நீடித்த வண்ணம் இருந்தது. 

    இந்தச் சூழலில், இந்திய கிரிக்கெட் வாரியம் இதுகுறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பும்ராவுக்கு பதிலாக இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி இடம்பெற்றுள்ளார். 

    இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி: 

    ரோஹித் ஷர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஷ்வின், யுவேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....