Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்டேய் உங்களுக்கெல்லா என்ன மூளைடா? பேராசிரியர்களுக்கு ஷாக் கொடுத்த மாணவர்..!

    டேய் உங்களுக்கெல்லா என்ன மூளைடா? பேராசிரியர்களுக்கு ஷாக் கொடுத்த மாணவர்..!

    ஸ்பெயினில் பிட் அடித்த மாணவன் குறித்து பகிரப்படும் நிகழ்வு இணையவாசிகளை கவர்ந்துள்ளது. 

    பள்ளி மற்றும் கல்லூரிப் பருவங்களில் நடக்கும் பல நிகழ்வுகள் எப்போதுமே விந்தைக்குரியவையாக இருப்பது இயல்பான விஷயம். பார்ப்பவர்களுக்கு வியப்பாக இருந்தாலும், அதை அரங்கேற்றுபவர்களுக்கு தைரிய மனநிலை இருக்கும். குறிப்பாக, பிட் அடிப்பவர்களுக்கு மேல் சொன்ன விஷயம் அதிகளவில் பொருந்தும்.

    பிட் அடிப்பதில் பல வகைகள், பல கில்லாடித்தனங்களை நம் மாணவர்கள் சிலரிடத்தில் காணலாம். ஆனால், அவ்வளவு  எளிதில் எவராலும் யூகிக்க முடியாதபடி  பிட் அடிக்கும் நிகழ்வொன்று ஸ்பெயினில் அரங்கேறியுள்ளது. 

    ஆம், ஸ்பெயினில் உள்ள சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் விநோதமான பிட் அடிக்கும் முறையை பின்பற்றியுள்ளார். அதென்ன விநோதம்? அந்த மாணவர் தான் தேர்வு எழுத எடுத்துச் செல்லும் எழுதுகோல்களின் (பேனாக்களின்) மேல் மிகச்சிறிய அளவில் ‘நோட்ஸ்’ எழுதியுள்ளார். 

    இதையும் படிங்க:10 மாதத்தில் 13 பேரை கொடூரமாக கொன்ற ஆட்கொல்லி புலி சிக்கியது எப்படி?

    ஆனால், தேர்வு கண்காணிப்பு அறையில் இருந்த பேராசிரியர் ஒருவர் மாணவனின் இந்த மோசடியை எப்படியோ கண்டுபிடித்துவிட்டார். இதையடுத்து, மாணவனிடமிருந்து பேனாக்களைக் அவர் கைப்பற்றியிருக்கிறார்.

    இந்நிலையில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த யோலான்டா என்ற சட்டக் கல்லூரி பேராசிரியை இந்த நிகழ்வை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார். அதுவும் பேனாக்களின் புகைப்படத்துடன். மேலும், `சில வருடங்களுக்கு முன்பு ஒரு தேர்வின்போது மாணவர் ஒருவரிடமிருந்து கைப்பற்றினோம். அந்த மாணவர் 11 பேனாக்களில் பாடம் முழுவதையும் எழுதியிருந்தார். என்ன ஒரு கலைநுணுக்கம்’ என அவர் இணையத்தில் பதிவு செய்திருக்கிறார்.

    இந்த செய்தியானது தற்போது இணையத்தில் பலராலும் பகிரப்பப்பட்டு வருகிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....