Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபந்தேல்கண்ட்: விரைவுச் சாலையை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

    பந்தேல்கண்ட்: விரைவுச் சாலையை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

    உத்தரபிரதேச மாநிலம் பந்தேல்கண்ட் நான்குவழி விரைவுச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். 

    உத்தரபிரதேச மாநிலத்தில் 296 கி.மீ. தொலைவுக்கு நான்குவழி விரைவு சாலை கட்டப்பட்டுள்ளது. இந்த நான்குவழி விரைவு சாலைக்கு கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. 

    இந்த பந்தேல்கண்ட் நான்குவழி விரைவு சாலையை ஜலானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்துள்ளார். மேலும், இந்த பந்தேல்கண்ட் விரைவு சாலை ஆக்ரா-லக்னோ விரைவு சாலையுடன் இணையும் படி அமைக்கப்பட்டுள்ளது. 

    உத்தரப்பிரதேசத்தின் 7 மாவட்டங்கள் வழியாக, 296 கி.மீ. தொலைவுக்கு இந்த பந்தேல்கண்ட் நான்குவழி விரைவு சாலை கட்டப்பட்டுள்ளது. இந்த சாலையை கட்டி முடிக்க ரூ.14,850 கோடி செலவானது என தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தச்சாலை குறித்து பேசிய இந்திய பிரதமர் மோடி, பந்தேல்கண்ட் விரைவு சாலை பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும், இதன் விளைவாக உள்ளூர் மக்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைகள் உருவாக்கப்படும் என தெரிவித்தார்.

    highwAY

    இது உத்தரப்பிரதேசத்தின் சித்ரகூட், பந்தா, ஹமிர்பூர், ஜலான், மகோபா உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ளது. தற்போது நான்கு வழிச்சாலையாக உள்ள இந்த பந்தேல்கண்ட் விரைவுச்சாலை வருங்காலத்தில் 6 வழிச்சாலையாக மாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்பின் முதல் மனைவி காலமானார்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....