Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகைது செய்யும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு உள்ளது- உச்சநீதிமன்றம்

    கைது செய்யும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு உள்ளது- உச்சநீதிமன்றம்

    சம்மன் அனுப்புதல், சோதனையிடுதல், சொத்துக்களை முடக்குதல், பறிமுதல் செய்தல், கைது செய்தல் ஆகிய அதிகாரங்கள் அமலாக்கத்துறைக்கு, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ளதாக உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 

    அமலாக்கத்துறையின் சம்மன், கைது, பறிமுதல் மற்றும் விசாரணை நடவடிக்கைகளுக்கு எதிராக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: 

    சட்டவிரோதமான பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறைக்கு உள்ள கைது, பறிமுதல், ஜாமீன் அளிக்கும் அதிகாரங்கள் அனைத்தும் குற்றவியல் நடைமுறை சட்ட விதிமுறை வரம்புகளை தாண்டியுள்ளது. இந்த விசாரணை அமைப்புகள், காவல்துறை அதிகாரத்தை பயன்படுத்துகின்றன. இந்த அமைப்புகள் விசாரணை நடத்தும் போது குற்றவியல் நடைமுறை சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். 

    அமலாக்கத்துறை காவல்துறை இல்லை என்பதால், விசாரணையின்போது அமலாக்கத்துறையினரிடம் குற்றவாளி அளிக்கும் வாக்குமூலம், நீதி விசாரணையில் குற்றவாளிக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. இப்படி செய்வது குற்றவாளியின் சட்ட உரிமைகளுக்கு எதிராக உள்ளது.

    அமலாக்கத்துறையின் விசாரணை சம்மன், வாக்குமூலம் பதிவு, சொத்துக்கள் பறிமுதல் ஆகியவை தனிநபரின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது. ஜாமீனுக்கான நிபந்தனைகள் மிகவும் கடுமையாக  உள்ளது. 

    இவ்வாறு, புகார் மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட  நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஷ்வரி, சி.டி.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு, இறுதியாக, 545 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை நேற்று (ஜூலை 27) புதன்கிழமை வழங்கினர்.

    அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    உலக நிதி விவகாரங்களுக்கு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதை சாதாரண குற்றமாக எடுத்துக் கொள்ள முடியாது. 

    சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் 45-வது பிரிவின்படி, தெரிந்து செய்யும் குற்றங்களுக்கும், ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்களுக்கும் பின்னர் ஜாமீன் வழங்க 2 நிபந்தனைகள் விதிப்பது சரியானது.

    அமலாக்கத்துறையின் கைது, பறிமுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளுக்காக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள 5, 8(4), 15, 17 மற்றும் 19 ஆகிய பிரிவுகள் அரசியலமைப்பு படி செல்லுபடியாகும். 

    ஒருவரை கைது செய்யும்போது அமலாக்கத்துறை வழக்கின் முதல் அறிக்கை Enforcement Case Information Report (ECIR) காட்ட வேண்டும் என்பது கட்டாயமில்லை. 

    அமலாக்கத்துறையின் தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் Serious Fraud Investigation Office (SFIO) மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் Directorate of Revenue Intelligence (DRI) போன்ற விசாரணை அமைப்புகள் காவல்துறைக்கு இணையாக கருத முடியாது. 

    குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் இல்லை. அதனால், விசாரணையின் போது அமைப்புகளால் பதிவு செய்யப்படும் வாக்குமூலங்களின் ஆதாரங்கள் செல்லுபடியாகும்.  

    மேலும், நிதி மசோதாவாக நிறைவேற்றப்படாத சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத் திருத்தத்தின் சில சரத்துகள் நீதிமன்றம் ஆராயவில்லை. இவை, ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் முடிவுக்கு விடப்பட்டுள்ளது. 

    அந்தநேரத்தில், அமலாக்கத்துறையில் காலிப்பணியிடங்கள் உள்ளதை மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த முக்கிய பிரச்சனைக்கு அரசு நிர்வாகம் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    இலவச திட்டம் மிக தீவிரமான பிரச்சனை- உச்சநீதிமன்றம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....