Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி

    ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி

    மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 3 – 0 என்ற கணக்கில் கோப்பையை வென்றுள்ளது.

    இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தச் சுற்றுப்பயணத்தின் முதல்படியாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடியது.

    அதன்படி, ஜூலை 22-ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 3 ரன்கள் வித்தியாத்தில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. இதைத் தொடர்ந்து, ஜூலை 24-ம் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. 

    இதன்மூலம், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. 

    இந்நிலையில், மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நேற்று (ஜூலை 27) நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கில் ஈடுபட்டது. 

    இந்நிலையில், இந்திய அணி தரப்பில் தவான் மற்றும் சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்நிலையில், தவான் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின்னர் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 8 ரன்கள் எடுத்த நிலையிலேயே ஆட்டமிழந்தார்.

    இருப்பினும், மறுமுனையில் இருந்த சுப்மன் கில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 98 ரன்கள் எடுத்திருந்தார். சுப்மன் கில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மழை குறுக்கிட்டது. இதைத் தொடர்ந்து 36 ஓவர்களிலேயே இந்திய அணியின் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.

    இதைத் தொடர்ந்து, இந்த ஆட்டத்தில் டக்வொர்த் முறை உபயோகிக்கப்பட்டது. அதன்படி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 36 ஓவர்களில் 256 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

    இதன்பிறகு, களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 26 ஓவர்களில் 137 ரன்கள் எடுத்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் மேற்கிந்திய தீவுகள் அணி இழந்து தோல்வியடைந்தது. 

    இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி 3-0 என்ற கணக்கில் இந்த ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. மேலும், இந்தப் போட்டிக்கான ஆட்டநாயகன் விருது சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது. அதேபோல், இந்தத் தொடருக்கான சிறந்த வீரர் விருதும் சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடக்கம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....