Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு'அறிவை விரிவு செய், அகண்டமாக்கு'-பொருநை இலக்கிய திருவிழாவை தொடங்கி வைத்து முதல்வர் பேச்சு

    ‘அறிவை விரிவு செய், அகண்டமாக்கு’-பொருநை இலக்கிய திருவிழாவை தொடங்கி வைத்து முதல்வர் பேச்சு

    நெல்லையில் 2 நாட்கள் நடைபெறும் பொருநை இலக்கிய திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். 

    தமிழக அரசு உத்தரவின் பேரில் நெல்லையில் இளகிய திருவிழா முதன் முதலாக தொடங்கியது. இந்த விழாவில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், அன்பில் மகேஷ், ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

    நெல்லை பொருநை இலக்கிய திருவிழாவை தொடங்கி வைத்து முதல்வர் காணொளி வாயிலாக பேசியதாவது:

    தமிழ்ச் சமூகமானது இலக்கிய முதிர்ச்சியும், பண்பாட்டின் உச்சத்தையும் அடைந்த பெருமைக்குரிய சமூகம். கீழடியைத் தொடர்ந்து சிவகளை, கொற்கை என பல அகழ்வாய்வுகள் வழியாகவும் பல்வேறு முன்னெடுப்புகள் வழியாகவும் அறிவியல் பூர்வமாக நிறுவப்படும்.

    நமது தொன்மை நம்முடைய பெருமை. இந்தப் பெருமையினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சென்று, அறிவுசார் சமூகத்தை வார்த்தெடுக்கும் இலக்குடன் இலக்கியத் திருவிழாக்கள் நடைபெற உள்ளன.

    தமிழின் செழுமைமிகு இலக்கிய மரபுகளைப் போற்றும்விதமாக பொருநை, வைகை, காவிரி, சிறுவாணி, சென்னை என ஐந்து இலக்கியத் திருவிழாக்களைத் தமிழ்நாடு அரசு நடத்துகிறது. 

    இதில் முதல் நிகழ்வாக, அன்னைமடியான பொருநை ஆற்றங்கரையில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்த இலக்கியத் திருவிழா சிறந்ததொரு முயற்சி. 

    ‘அறிவை விரிவு செய், அகண்டமாக்கு’ என்று பாவேந்தர் சொன்னதற்கிணங்க நமது தமிழ் மண்ணின் செழுமைமிக்க இலக்கிய பண்பாட்டினை உலகிற்குப் பறைசாற்ற நடைபெறும் பொருநை இலக்கியத் திருவிழாவிற்கு எனது வாழ்த்துகள். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படட்டும்.

    இவ்வாறு, அவர் பேசினார். 

    இந்தோனேஷியா நிலநடுக்கம்; 300-ஐ தொட்ட பலி எண்ணிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....