Monday, March 25, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்யூடியூப்பில் சாதனை செய்யும் பொன்னியின் செல்வன்..

    யூடியூப்பில் சாதனை செய்யும் பொன்னியின் செல்வன்..

    பொன்னியின் செல்வன் படத்திலிருந்து கடந்த 20-ஆம் தேதி வெளியான அகநக பாடல் யூடியூப் தளத்தில் 40 லட்சம் பார்வைகளை கடந்திருக்கிறது.

    பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகிய திரைப்படம்தான், பொன்னியின் செல்வன்.

    கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்த இத்திரைப்படம் இரு பாகங்களாக உருவாகியுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது.

    பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வெளிவந்து பற்பல சாதனைகளை நிகழ்த்தியது. குறிப்பாக, 450 கோடி என்ற மாபெரும் வசூல் சாதனையை புரிந்தது.

    இதைத்தொடர்ந்து, சமீபத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து ‘அகநக’ எனும் பாடல் கடந்த 20-ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் தற்போது வரை இப்பாடல் 40 லட்சம் பார்வைகளைத் தாண்டியுள்ளது.

    மேலும், இப்பாடலானது பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் குறும் பாடலாக இடம்பெற்று பலரின் மனதையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ‘‘உங்களுக்கு எதற்கு இந்த வேலை?’’ – தயாரிப்பாளரை நோக்கி கேள்வி எழுப்பிய அமைச்சர்..

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....