Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஓடிடி-க்கு வந்த பொன்னியின் செல்வன்... இனி எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்!

    ஓடிடி-க்கு வந்த பொன்னியின் செல்வன்… இனி எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்!

    அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று முதல் ஒளிபரப்பாகிறது.

    மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் பற்பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. தன்னுடைய கனவுப் படமான பொன்னியின் செல்வனை இயக்கி வெளியிட்ட சந்தோஷத்தில் தற்போது மணிரத்னம் இருக்கிறார். 

    பொன்னியின் செல்வன் திரைப்படமோ 500 கோடி என்ற மாபெரும் வசூலை நோக்கி  வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறது. தீபாவளி வெளியிடாக சர்தார் மற்றும் பிரின்ஸ் திரைப்படங்கள் திரைக்கு வந்தும், பொன்னியின் செல்வன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

    இந்நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் எப்போது ஓடிடி தளத்தில் வெளியாகும் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதைத்தொடர்ந்து. படக்குழு இன்று பொன்னியின் செல்வன் ஓடிடிக்கு வருவார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படியே, அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பொன்னியின் செல்வன் வெளிவந்துள்ளது. 

    முன்னதாக, ‘சோழா சோழா’ மற்றும் ‘ராட்சச மாமனே’ மற்றும் ‘தேவராளன் ஆட்டம்’  போன்ற படத்தின் வீடியோ பாடல்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: மூத்த பேராசிரியர்கள் பதவி உயர்வை தாமதப்படுத்தக் கூடாது – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....