மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சொல்’ பாடலின் லிரின் வீடியோ வெளியானது.
மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் பொன்னியின் செல்வம் திரைப்படம் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: தனுஷின் ‘நானே வருவேன்’ டீசர் எப்படி இருக்கிறது?
இரு பாகங்களாக உருவாகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இரு பாகங்களில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து, பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதைமாந்தர்களை அவ்வபோது போஸ்டராக இணையதளத்தில் படக்குழு வெளியிட்டு வந்தது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றன.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல்களின் லிரிக் வீடியோ ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, பொன்னி நதி, சோழா சோழா, ராட்சச மாமனே பாடல்கள் வெளியான நிலையில், தற்போது ‘சொல்’ எனும் பாடலின் லிரிக் வீடியோ வெளிவந்துள்ளது.
கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படமே பொன்னியின் செல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.